Jio தரும் இலவச 20ஜிபி டேட்டா.. 90 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) பயனர்கள் இப்போது ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை விட மூன்று மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் ஜியோ நிறுவனம் மூன்று மாத வேலிடிட்டி தரும் சில திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது.
சரி இப்போது வியத்துக்கு வருவோம். அதாவது மூன்று மாதம் வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றில் 20ஜிபி இலவச டேட்டா நன்மை வழங்குகிறது ஜியோ. அந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.899 ஆகும். இப்போது ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதுபோக 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
அதன்படி ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஒருவேளை இலவச டேட்டா வேண்டாம் அமேசான் பிரைம் சந்தா தரும் திட்டம் வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் . பின்பு 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite) இந்த திட்டம் மூலம் கிடைக்கிறது.
இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கிறது.
photo credit: newindianexpress.com, EPS


Click it and Unblock the Notifications