Home
News

இனி FREE டேட்டா.. மாசம் ரூ.300-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. 200 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio குஷி!

ஒரு ரீசார்ஜ் போதும் மூன்று மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் இலவச டேட்டா (Free Data) சலுகைகளை ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) ஜியோ (Jio) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.300 செலவில் கிடைப்பதால், பட்டையை கிளப்பி வருகிறது. விவரம் இதோ.

ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் வெறும் ரூ.300ஆக இருக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா மட்டுமல்லாமல், இலவச டேட்டாவையும் கொடுத்து இருக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வருகிறது.

இனி FREE டேட்டா.. மாசம் ரூ.300-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. 200 ஜிபி!

இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மூன்று மாதங்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று டேட்டா சலுகைகளும் போக 20 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா வீதம் 90 நாட்களுக்கு 180 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி இலவச டேட்டா என்று மொத்தமாக 200 ஜிபி கிடைக்கிறது.

இந்த விலைக்கு டேட்டாவுக்கே சலுகைகள் போதுமானதாக இருக்கிறது. ஆனால், இதில் சலுகைகள் இன்னும் முடியவில்லை. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே 90 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் சலுகை இதில் கிடைக்கிறது.

இதை நாளொன்றுக்கு 100 வீதம் 90 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளை பெற்ற பிறகும் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதே டேட்டா சலுகைகளுடன் 98 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவச டேட்டா மட்டும் கிடைக்காது. ஆனால், மற்ற சலுகைகளான அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 98 நாட்கள் வேலிடிட்டியில் சலுகைகள் கொடுக்கப்படும்.

மூன்று மாதங்களுக்கும் மேல் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா பொருந்துகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் வேலிடிட்டி அதிகமாக கிடைத்தாலும், இலவச டேட்டா இல்லாததால், 196 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், அது பெரிய விஷயமாக கஸ்டமர்களுக்கு இருக்காது. முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய சலுகைகள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan With 90 Days Validity Unlimited Voice Calls 2GB Daily Data And 20GB Free Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X