Home
News

90 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 200 ஜிபி டேட்டா.. 3 மாசத்துக்கு ஓடிடி.. குஷியில் யூசர்கள்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவன கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் போதும், மூன்று மாதங்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள், மூன்று மாதங்களுக்கான ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

டெலிகாம் (Telecom) கஸ்டமர்களிடையே மூன்று மாத திட்டங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. இதனாலேயே, 84 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் அதிகளவில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதில் 90 நாட்கள் திட்டங்கள் குறைவாக கிடைத்தாலும், சலுகைகள் அதிகமாக இருக்கின்றன.

90 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 200 ஜிபி டேட்டா!

இப்படியான சலுகைகளுடன் ஜியோ ரூ 899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 Prepaid Plan) கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒட்டுமொத்த சலுகைகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஓடிடி தொடங்கி வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வரையில் (Unlimited 5G Data) மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது.

ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த திட்டத்தின் டேட்டா சலுகைகளை முதலில் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், 20 ஜிபி இலவச டேட்டாவும் (20GB Free Data) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அதேபோல 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 20 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாமலேயே, 200 ஜிபி டேட்டாவை பெறலாம்.

எப்படி பார்த்தாலும், 90 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் டேட்டாவுக்கு குறை இருக்காது. இந்த டேட்டாவுக்கு ஏற்ப ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த ஓடிடி சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ரீசார்ஜ் செய்தவுடனேயே ஆக்டிவேட் செய்யப்படும்.

இதற்கு அடுத்து கிடைக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கமாக கிடைப்பதை போலவே இருக்கின்றன. ஆகவே, 90 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகைகளுடன் இந்த திட்டம் முடியவில்லை. ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளை கொடுக்கிறது. இதில் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை மூலம் 50 ஜிபிக்கான ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதை பயன்படுத்தி கொள்ள ஜியோ சிம் கார்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த சலுகைகளே இதில் வருகின்றன.

ஆகவே, 90 நாட்களுக்கு அதிகப்படியான சலுகைகள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், வழக்கமாக கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு செல்லலாம். இப்படி ஜியோ ரூ 889 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இதிலும் மேற்கண்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

ஆனால், டேட்டா மட்டும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி மட்டுமே கிடைக்கும். அதேபோல ஜியோ சாவன் ப்ரோ சந்தாவும் கிடைக்கும். ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டியில் 1.5 ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 90 நாட்கள் ஜியோஹாட்ஸ்டார், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ கிளவுட், ஜியோ டிவி சலுகைகள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan With 90 Days Validity Unlimited Voice Calls 200GB Data Free JioHotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X