ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 200 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளானது மூன்று மாதங்களுக்கு வேண்டுமானால், பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கும் ஜியோ ரூ.899 திட்டத்துக்கு செல்லலாம். இதில் கூடுதல் டேட்டா மற்றும் ப்ரீமியம் ஓடிடி சந்தா இலவமாக கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா, அதற்கு பிறகு கிடைக்கும் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்காக எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்போது திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ.899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): 90 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 3 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவை பெற்று கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி கொடுக்கப்பட்டு (Per Day 2GB Data) இருக்கிறது.
இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைக்கு அடுத்து கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 20 ஜிபிக்கு லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைப்பதால், 90 நாட்களுக்கு மொத்தமாக 180 ஜிபி டேட்டா கிடைக்கும். இதோடு 20 ஜிபி டேட்டாவையும் சேர்த்தால் மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இது 4ஜி கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்றால், 200 ஜிபிக்கு மேலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
எந்த லிமிட்டும் கஸ்டமர்களுக்கு இருக்காது. இப்போது, மற்ற சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இந்த ஜியோ ரூ.899 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கம்போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்களுக்கு கொடுத்து இருக்கிறது.
இந்த சலுகைகள் போக கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro), ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆகிய சலுகைகளை இந்த ஜியோ ரூ.899 திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவானது 18 மாதங்களுக்கு கிடைக்கும். இதில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா (Nano Banana) கிடைக்கிறது.
18 மாதங்கள் சந்தா கிடைப்பதால், இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ள 90 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் உடனடியாக செய்யப்பட வேண்டும். ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதில் லைவ் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிரீமியம் மூவிஸ் மற்றும் சீரிஸ்களை பார்த்து கொள்ளலாம்.
ஜியோ ஏஐ கிளவுட் சந்தா வழியாக 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ கிளவுட் ஆப் வழியாக ஜியோ மொபைல் நம்பரை லாகின் செய்தால் போதும், இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி சந்தாவும் கிடைக்கிறது. ஆனால், இதில் பிரீமியம் கன்டென்ட்கள் மற்றும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்காது.


Click it and Unblock the Notifications
