முரட்டு Jio ரீசார்ஜ்.. 90 நாட்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.. வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டாவும் (Extra Data) கொடுக்கப்படுகிறது. ஆனால், இது எல்லா திட்டங்களுக்கும் கிடைக்காது. ஜியோ ரூ.899 திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோ ரூ. 899 திட்டத்தின் முழு விவரங்கள்: இந்த திட்டம் வெறும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு பிரீமியம் சந்தாக்களை (Subscriptions) கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 180 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக 20 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 200 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இது அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இது தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு (Eligible Subscribers) மட்டுமே கிடைக்கும். அதாவது, 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல், 5ஜி டேட்டா கிடைக்கும்.
இந்தியாவின் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம். லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் இதில் அடங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்த பிரீமியம் சந்தா மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்கள் உள்ளன.
1. கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro): இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதனுடன் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட ஏஐ அணுகல்களையும் கொடுக்கிறது.
2. ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar): கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக, 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile) இலவசமாக கிடைக்கிறது. இதன் மூலம் லைவ் கிரிக்கெட் போட்டிகளை (LIVE Cricket) மற்றும் பிரீமியம் கன்டென்ட்களை பார்த்து கொள்ள முடியும். மார்வெல் கன்டென்ட்களும் கிடைக்கும்.
3. ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud), ஜியோ டிவி (JioTV): ஜியோ வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை சேமிக்க 50 ஜிபிக்கு இலவச கிளவுட் ஸ்டோரேஜ் இதில் கொடுக்கப்படுகிறது. இலவச டிவி சேனல்கள் மற்றும் கன்டென்ட்களுடன் ஜியோ டிவி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஜியோ மொபைல் நம்பர் வழியாக பயன்படுத்தலாம்.
மேலும், கூகுள் ஜெமினி சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட அன்லிமிடெட் 5ஜி திட்டங்களை ரீசார்ஜ் செய்து ஆக்டிவாக (Active) வைத்திருக்க இருக்க வேண்டும். ஆகவே, இந்த 90 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு அடுத்த திட்டத்தை ரூ.349 விலை அல்லது அதற்கு மேல் பெறலாம். மூன்று மாதங்களுக்கு பெஸ்ட் திட்டமாகவே இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications