Home
News

தலைவா Jio நீ கிரேட்.. இலவச டேட்டாவுடன் கொத்தா 200GB டேட்டா.. இனி பெஸ்ட் 5G பிளான் இதான்.. அள்ளித்தரும் அம்பானி

ஜியோ (Jio) பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் ஹெவி டேட்டா யூசர் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு பெஸ்ட் 5ஜி திட்டமாக (Best 5G Plan) அமைகிறது. இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் நன்மை, கூடுதல் எக்ஸ்ட்ரா இலவச டேட்டா என்று பல நன்மைகளை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்தின் விபரம் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பற்றிய விபரங்கள் இதோ.

ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விலை ஏற்றத்திற்கு பிறகு, தொடர்ந்து பல புதிய திட்டங்களை அதன் வடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இதில் அதிக வேலிடிட்டி தேடும் வாடிக்கையாளர்கள் மற்றும் அதிக டேட்டா நன்மையை தேடும் வடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை நிறுவனம் கூடுதல் எக்ஸ்ட்ரா இலவச டேட்டாவுடன் வழங்கி அசத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தலைவா Jio நீ கிரேட்.. இலவச டேட்டாவுடன் கொத்தா 200GB டேட்டா..

தலைவா Jio நீ கிரேட்.. 20GB இலவச டேட்டாவுடன் கொத்தா 200GB டேட்டா நன்மை வழங்கும் 90 நாள் திட்டம்:

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் அணைத்து நெட்வொர்க்குகளுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்கள் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் பெறுகிறார்கள்.

இந்த நன்மை ஜியோவின் ஸ்டாண்டர்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மையோடு ஒத்துப்போகிறதே, இதில் என்ன பெரிய வித்தியாசம் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இந்த திட்டத்தில் வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியை வைத்து பார்க்கையில், மொத்தமாக 90 நாட்களுக்கு இந்த திட்டம் 180GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan):

இந்த திட்டத்தை தனித்துவமானதாக மாற்ற, ஜியோ நிறுவனம் இத்துடன் 20GB கூடுதல் டேட்டாவை இலவச நன்மையாக (20GB Free Data Benefit) வழங்குகிறது. இதனால், இந்த திட்டத்தின் மூலம் இதன் பயனர்கள் மொத்தமாக 200GB டேட்டா நன்மையை வேலிடிட்டி காலத்திற்குள் அனுபவிக்க முடியும். இந்த திட்டம் குறிப்பாக நீண்ட நாள் ரீசார்ஜ் திட்டத்தை தேடும் வாடிக்கையாளர் மற்றும் ஹெவி டேட்டா நன்மையை தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த திட்டம் கூடுதல் இலவச டேட்டா நன்மையுடன் கூடுதல் இலவச ஜியோ சேவையையும் வழங்குகிறது. இதில் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (JioTV), மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சேவைகள் பயன்படுத்த கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இந்த புதிய லேட்டஸ்ட் 5ஜி பிளான் உண்மையில் ஒரு அற்புதமான ரீசார்ஜ் திட்டமாக அமைகிறது.

இந்தியாவில் உள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் எதுவுமே இத்தகைய திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 20GB டேட்டாவை இலவசமாக எந்த நிறுவனமும் அதன் 90 நாள் வேலிடிட்டி திட்டத்துடன் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan With 200GB Data Along With 20GB Free Data Benefit For 90 Days Is The Best 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X