Home
News

கேபிள் TV-க்கு ஒரே போடு.. 1000+ லைவ் டிவி சேனல்.. 1000 ஜிபி டேட்டா.. 10+ ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ஹோம் (JioHome) கஸ்டமர்களுக்கு பிராட்பேண்ட் திட்டத்திலேயே லைவ் டிவி சேனல்களும் கிடைக்கின்றன. ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களையும் ஒரே திட்டத்தின் கீழ் பெற்று கொள்ளலாம். இதில் ரூ.899 திட்டம் பக்கா சலுகைகளுடன் கிடைக்கிறது.

ஜியோ ரூ.899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): 30 எம்பிபிஎஸ் வேகம், 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் பல்வேறு ஓடிடி ஆப்களுடன் ஜியோ ஹோம் ரூ.899 திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் போஸ்ட்பெய்ட் ஃபைபர் திட்டமாகும். வை-ஃபை ரூட்டர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-ஃபை டேட்டாவை பெறலாம்.

கேபிள் TV-க்கு ஒரே போடு.. 1000+ லைவ் டிவி சேனல்.. 1000 ஜிபி டேட்டா!

இந்த திட்டத்திற்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும், திட்டத்தை முதல் முறையாக பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

அதாவது, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த 1000 ஜிபி டேட்டா முழுமையாக தீர்ந்துவிட்டால், அதன் பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதுதவிர, ஜியோ ஹோம் ரூ.899 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகின்றன.

இந்த வாய்ஸ் கால்கள் வை-ஃபை காலிங் வசதி மூலம் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதனால் வீட்டில் இருக்கும் போது இணைய இணைப்பை பயன்படுத்தி வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும். ஜியோவின் இந்த ரூ.899 திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த லைவ் டிவி சேனல்கள் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே, டிவி பொழுதுபோக்கை அதிக தரத்தில் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் கூடுதல் பலன்களை வழங்குகிறது. ஓடிடி சேவைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) கிடைக்கிறது.

மேலும், யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. இதனுடன் சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற பிரபலமான ஓடிடி தளங்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay) உள்ளது.

தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இந்த ஜியோ ஹோம் ரூ.899 திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும்.

மேலும், ஜியோ ஏர்ஃபைபர் அல்லது ஜியோ ஃபைபர் சேவை கிடைக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், ஜியோ நிறுவனம் இதைவிட குறைவான விலையில் ரூ.599 திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்திலும் 30 எம்பிபிஎஸ் வேகம், மாதத்திற்கு 1000 ஜிபி டேட்டா கிடைக்கும்.

64 கேபிபிஎஸ் போஸ்ட்-டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000+ லைவ் டிவி சேனல்களும் கிடைக்கின்றன. ஜியோ ரூ.599 திட்டத்திலும் ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரிபிளஸ், டைம்ஸ்பிளே, தாரங்பிளஸ், ஈராஸ்நவ், லயன்ஸ்கேட்ஸ் பிளே, ஷீமாரூமீ மற்றும் ஈடிவி வின் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்கள் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan With 1000 TV Channels 1000GB Data Unlimited Voice Calls 10 OTT Apps Check Home Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X