Jio vs Airtel.. பட்ஜெட் விலையில் 90 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. அன்லிமிடெட் சலுகைகள்.. எது சிறந்தது?
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன. அதேபோல் இந்நிறுவனங்கள் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 899 prepaid recharge plan) தினசரி 2ஜிபி டேட்டாவை. குறிப்பாக இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஜியோவின ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் பிளான் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற அசத்தலான நன்மைகளை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் நாம் பெறமுடியும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் பிளான் (airtel rs 929 prepaid recharge plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எது சிறந்தது? ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் 90 நாள் வேலிடிட்டி வழங்குவதால் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.
ஜியோ நிறுவனம் நேற்று ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களை ரூ.1099 விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன்கள் 4ஜி ஆதரவு, யுபிஐ, 128ஜிபி மெமரி கார்டு பயன்படுத்தக்கூடிய எஸ்டி கார்டு ஸ்லாட், 1000mAh பேட்டரி, டிஎப்டி (TFT) டிஸ்பிளே, டி9 (T9) கீபோர்டு, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ பே (JioPay) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








