Jio மற்றும் Airtel சிம் இருக்கா? ஒரே ரீசார்ஜ்.. 90 நாட்கள் வேலிடிட்டி, 200GB டேட்டா.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அவ்வப்போது அசத்தலான சலுகைகள் மற்றும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் பட்ஜெட் விலை திட்டங்களை வைத்துள்ளன.
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. இதில் எந்த திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 929 prepaid plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
பின்பு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.899 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ரூ.399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாக கிடைக்கும். இதேபோல் பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும்.
எது சிறந்தது? ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது குறைந்த அளவிலான டேட்டா மட்டுமே வழங்குகிறது. அதுவும் ஏர்டெல் திட்டத்தில் ஓடிடி நன்மைகளும் வழங்கப்படவில்லை. ஆனா ஜியோவின் ரூ,899 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா, ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. எனவே ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications