Home
News

புது Jio ஆஃபர்.. 2 மாசம் FREE.. 2 சதவீத கோல்டு.. 2 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. கொடுத்து வெச்ச கஸ்டமர்கள்!

ஜியோ நிறுவனத்தின் 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அக்டோபர் 5ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. முதலில் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோஹோம் ரூ.1,200 திட்டம் ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதலாக பல்வேறு திட்டங்களிலும் ஆண்டுவிழா சலுகையை கிடைக்கிறது. இதில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் பட்டையை கிளப்புகிறது.

ஜியோ ரூ.899 திட்ட சலுகைகள் (Jio Rs 899 Plan Offer): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏற்கனவே சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இப்போது, ஆண்டுவிழா சலுகைகளும் சேர்ந்துள்ளன. முதலில் இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

புது Jio ஆஃபர்.. 2 மாசம் FREE.. 2 சதவீத கோல்டு.. 2 ஜிபி டேட்டா!

இந்த தினசரி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம். அதேபோல 2 ஜிபிக்கு பிறகு 64கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மேலும், தினமும் 100 எம்எஸ்எம்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் வருகிறது.

இது வழக்கமாக கிடைக்கும் சலுகைகளாகும். இப்போது, ஆண்டுவிழா சலுகைகளுக்கு வருவோம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஜியோ பைனான்ஸ் (Jio Finance) ஆப் 2 சதவீத கூடுதல் டிஜிட்டல் கோல்டு கிடைக்கிறது. அதாவது, நீங்கள் ஜியோ கோல்டு வாங்கும்போது, அந்த மொத்த விலையில் இருந்து 2 சதவீதத்துக்கு இலவசமாக கோல்டு கொடுக்கப்படும்.

இந்த சலுகையை பெறுவதற்கு 918010000524 நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். இதற்கு முன்பாக இந்த திட்டத்தை உங்களது ஜியோ நம்பரில் ஆக்டிவ் செய்து கொள்ளுங்கள். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோஹோம் (JioHome) சந்தாவை 2 மாதங்களுக்கு இலவசமாக பெறலாம். இதுவொரு ப்ரீ-டிரையல் ஆப்ஷனாகும். ஆகவே, புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஏற்கனவே, இருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்காது. அவர்கள் ஜியோஹோம் ரூ.1,200 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்து ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி (JioHotstar Mobile/TV) சந்தா கிடைக்கிறது. இதை திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ரூ.399 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அதேபோல அஜியோ ஆன்லைன் ஸ்டோரில் ரூ.1,000 விலைக்கும் மேல் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.200 பிளாட் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 3 மாதங்களுக்கு சொமோட்டோ கோல்டு (Zomato Gold) மெம்பர்ஷிப் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஃபுட் டெலிவரியில் சலுகைகள் கிடைக்கும். ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா கொடுக்கப்படுகிறது.

இந்த சந்தாவை 1 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், 6 மாதங்களுக்காக நெட்மெட்ஸ் ஃபர்ஸ்ட் மெம்பர்ஷிப் (Netmeds First Membership) கிடைக்கிறது. அதேபோல ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மூலம் ஃபிளைட் டிக்கெட் புக்கிங் செய்தால் ரூ.2,220 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இது உள்நாட்டு பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதே ஈஸ்மைட்ரிப் மூலம் ஹோட்டல் புக்கிங் செய்தால் 15 சதவீத ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இறுதியாக 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் (JioAICloud) ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளையும் ரூ.899 விலைக்கு கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், அந்த நாட்கள் முழுவதும் அதிகப்படியான சலுகைகளை பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan Offer JioHome 2 Month Free Trial 2 Percent Extra Jio Gold 3 Months Zomato Gold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X