Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்களுக்கு கவலை இருக்காது.. 200ஜிபி டேட்டா.. ஓடிடி.. SMS.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் ஓடிடி சந்தா உள்ள திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 90 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்களுக்கு கவலை இருக்காது.. 200ஜிபி டேட்டா..

அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல்
(Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்பாக ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தருவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை 365 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்களுக்கு கவலை இருக்காது.. 200ஜிபி டேட்டா..

ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில்
கொடுக்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan Get 90 Days Validity Free 18 Month Google Gemini Pro Rs 35100
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X