Jio க்கு அடிங்க சல்யூட்.. 90 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. JioHotstar சந்தா!
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் தினசரிக்கு டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போக கூடுதல் டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் ஓரிரு திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது, வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா (Daily Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகளுடன் கூடுதலாக லம்ப்-சம் டேட்டா (Lumpsum Data) கொடுக்கப்படும். இதில் ஜியோ ரூ. 899 திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ. 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 180 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுடன் 20 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவாகும்.
நாளொன்றுக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். ஆகவே, இந்த 200 ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகை போல கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
90 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை (Unlimited Local STD Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா (JioHotstar OTT Subscription) கொடுக்கப்பட்டு உள்ளது. இதை மொபைல் மற்றும் டிவிகளில் 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) மற்றும் ஜியோ ஹோம் (Jio Home) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. 90 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட கம்மியான விலைக்கு கூடுதல் டேட்டா கொண்ட திட்டம் உள்ளது.
ஜியோ ரூ. 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா சலுகையும் கிடைக்கும். 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். மேலும், 20 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா மற்றும் வேலிடிட்டியை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு செய்து கொள்ளலாம்.
ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோ ஹோம் சலுகையும் கிடைக்கும். இந்த திட்டங்களில் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி, ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோ ஹோம் ஆகிய சலுகைகள் கூடுதல் சலுகைகளாகவே இருக்கிறது. ஆகவே, இப்போதைக்கு மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








