அதிரடிக்கு தயாரான Jio.. 90 நாள் திட்டம்.. 20GB எக்ஸ்ட்ரா.. 200GB டேட்டா நன்மை.. மக்களை கவரும் புது பிளான்..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புதிதாக 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio 90 days validity prepaid plan) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக 3 மாதங்களுக்கு, டேட்டா (data), வாய்ஸ் கால்ஸ் (voice calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் இலவச நன்மைகளை (free additional benefits) வாரி வழங்கும் சிறந்த திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் விலை மற்றும் இந்த திட்டத்தின் முழு நன்மை விபரங்கள் இதோ.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம் தற்போது பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்களை (Jio budget friendly recharge plans) நீண்ட நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வழங்கி மக்களை ஈர்த்து வருகிறது. ஜியோ நிறுவனத்தின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு, பல கோடி மக்கள் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.

அதிரடிக்கு தயாரான Jio.. 90 நாள் திட்டம்.. 20GB எக்ஸ்ட்ரா.. 200GB டேட்டா நன்மை.:
இதில் பெரும்பாலான மக்கள் தேர்வு செய்த நிறுவனமாக பிஎஸ்என்எல் திகழ்கிறது. இருப்பினும், தனியார் டெலிகாம் (private telecom industries) நிறுவனங்கள் அவர்களின் புதிய திட்டங்களை வைத்து மக்களை ஈர்க்க துவங்கியுள்ளனர். என்ன தான் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்திருந்தாலும், நிறுவனம் இப்போது தனது நெட்வொர்க்கில் இருந்து விலகி சென்ற வாடிக்கையாளர்களை ஈர்க்கும் படியான புதிய மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், ஜியோ நிறுவனம் காசுக்கு ஏற்ற சொகுசு என்ற பாணியில் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan). இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Jio 90 days validity pack) வழங்குகிறது. அதாவது, முழுமையாக மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை இந்த திட்டம் (Jio 3 months validity plan) வழங்குகிறது.
ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan):
இதன் மூலம் 90 நாட்களுக்கு ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் போதும். சரி, இப்போது இந்த புதிய ஜியோ 899 திட்டம் (Jio 899 Plan) கீழ் நிறுவனம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் மொத்தமாக 180GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை கிடைக்கிறது.
இந்த புதிய Jio 899 Plan கீழ் நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இந்த நன்மை தவிர இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் ஜியோ நிறுவனம் கூடுதலாக 20GB எக்ஸ்ட்ரா டேட்டாவையும் (20GB Jio extra data) இந்த திட்டம் வழங்குகிறது.
200GB டேட்டா நன்மை (200GB total data):
இதன் மூலம் ஒட்டுமொத்த டேட்டாவின் அளவு 200GB டேட்டா நன்மையை (200GB total data) வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ ட்ரூ 5ஜி பிளான் நன்மையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data under Jio's True 5G plan) நன்மையையும் வழங்குகிறது. இது தவிர இந்த திட்டம் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி கட்டணம் ரூ.9.9 என்ற விலையில் 90 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








