Home
News

கேபிள் TV கதையை முடிச்சு விட்ட Jio.. 1000+ லைவ் டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி ஆப் சந்தா.. 100 எம்பிபிஎஸ் டேட்டா!

கேபிள் டிவிக்கு நிகராக லைவ் டிவி சேனல்களை கொடுக்கும் ஜியோ ஏர்ஃபைபர் (Jio Airfiber) திட்டங்களுக்கு கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. 1000+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 10+ ஓடிடி ஆப்கள், 100 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களின் சலுகைகளும் கிடைக்கிறது.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் ரூ.599 விலையில் இருந்து கிடைக்கின்றன. புதியாக திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு இலவசமாக டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள், வை-பை டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு குறைந்தபட்சம் ரூ.599 செலுத்தி திட்டத்தை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். இப்போது, ரூ.899 விலை கொண்ட திட்டத்தை பார்ப்போம்.

கேபிள் TV கதையை முடிச்சு விட்ட Jio.. 1000+ லைவ் டிவி சேனல்கள்!

ஏனென்றால், ரூ.599 திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகம் மட்டுமே கிடைக்கும். ஆனால், ரூ. 899 திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். ஆகவே, டிவியில் 4K ரெசொலூஷனில் ஓடிடி ஆப்களை பார்க்கலாம். லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம். மேலும், வை-பை டேட்டாவை அதிவேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும்.

ஜியோ ரூ. 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கும். மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை வை-பை ரூட்டர் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம்.

ஆனால், வை-பை கால்களை மட்டுமே செய்து கொள்ள முடியும். இந்த 1000 ஜிபி டேட்டா முடிந்த பிறகு வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும். டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளுக்கு அடுத்து 1000+ லைவ் டிவி சேனல்களின் சலுகை மற்றும் 10+ பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகைகளை ஆண்ட்ராய்டு 4கே பாக்ஸ் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஓடிடி ஆப்களில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) போன்ற பிரீமியம் ஆப்கள் கிடைக்கின்றன. மேலும், ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay) மற்றும் தாரங்பிளஸ் (TarangPlus) ஆப்கள் கிடைக்கின்றன.

ஈராஸ் நவ் (Eros Now), லையன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்கள் வருகின்றன. இந்த ஜியோஏர்ஃபைபர் திட்டத்தை பெறுவதற்கு ஜியோ கஸ்டமர்களாக இருக்க வேண்டும். ஜியோ ஸ்டோர், ஜியோ போர்டல் மற்றும் மை ஜியோ ஆப் வழியாக இந்த ஏர்ஃபைபர் திட்டங்களை புக் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் மாத கணக்கில் கொடுக்கப்படும். ஆனால், முதலில் திட்டத்தை பெறும்போது, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இப்படி 6 மாதங்கள், 12 மாதங்கள் வரையில் முன்கூட்டியே தொகையை செலுத்தி கொள்ளலாம். மேலும், ஜிஎஸ்டி கட்டணமும் இதற்கு வசூலிக்கப்படும். இப்படி செய்தால் சலுகை கிடைக்கும்.

அதாவது, முன்கூட்டியே தொகையை செலுத்தி திட்டத்தை பெறும்போது, இன்ஸ்டாலேஷன் கட்டணத்தில் சலுகைகள் இருக்கும். இல்லையென்றால், கூடுதலாக செலவாகும். ஏனென்றால், இதில் வை-பை ரூட்டர், 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படும். இதனாலேயே முதல்முறை திட்டத்தை பெறும்போது கூடுதல் கட்டணம் இருக்கும்.

ஜியோ போர்டல் வழியாக 2 மாதங்களுக்கான ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை இலவமாக பெற்று கொள்ளலாம். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் 2 மாத ஆபர் பக்கத்தை கிளிக் செய்தால், மொபைல் நம்பர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டால், உங்களுக்கு பகுதியில் இருக்கும் ஜியோ ஸ்டோரில் இருந்து திட்டத்தின் சலுகைகள் கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Plan 100 Mbps Speed Data 1000 TV Channels 10 OTT Unlimited Voice Airfiber Plan in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X