Jio சிம் யூஸ் பண்றீங்களா.. இந்த 2 ரீசார்ஜ் போதும்.. 3 மாதங்களுக்கு எந்த கவலையும் இருக்காது.. விட்றாதீங்க..
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் கூட சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ (Jio) நிறுவனம். அதேபோல் ப்ரீபெய்ட் திட்டங்களில் அவ்வப்போது சில அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ. அதேபோல் பட்ஜெட் விலையில் 90 நாள் மற்றும் 98 நாள் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.
அதாவது ஜியோ நிறுவனம் ரூ.899 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்த திட்டங்கள் தான் அதிக சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு எந்த கவலையும் இருக்காது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டமும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.
அதன்படி ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில்ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை இந்த ஜியோ ரூ.899 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் கூடிய விரைவில் ஜியோ நிறுவனம் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications