Home
News

லட்டு மாதிரி எக்ஸ்ட்ரா டேட்டா கொடுக்கும் Jio.. 90 நாட்களுக்கு OTT.. 90 நாட்கள் வேலிடிட்டி.. யாரு விடுவா?

ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ (jio) நிறுவனம். அதுவும் எக்ஸ்ட்ரா டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போதும் வழங்கி வருகிறது ஜியோ. சரி இப்போது விஷயத்துக்கு வரும். ஜியோ நிறுவனம் எக்ஸ்ட்ரா டேட்டா தரும் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

லட்டு மாதிரி எக்ஸ்ட்ரா டேட்டா கொடுக்கும் Jio.. 90 நாட்களுக்கு OTT..

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.749 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ.399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாகக் கிடைக்கும். இதேபோல் பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

லட்டு மாதிரி எக்ஸ்ட்ரா டேட்டா கொடுக்கும் Jio.. 90 நாட்களுக்கு OTT..

அதன்படி ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.899 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ.399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாக கிடைக்கும். இதேபோல் பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக ஜியோ ரூ.749 ம்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் எக்ஸ்ட்ரா டேட்டா, ஓடிடி நன்மைகள் மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs.899 and Rs.749 prepaid plans offer extra data along with OTT benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X