மகராசன் அம்பானிதான்.. வெறும் ரூ.898 போதும்.. இன்டர்நேஷனல் கால்கள்.. துபாய்க்கே பேசலாம்!
ஜியோ (Jio) நிறுவனம், யுஏஇ (UAE), யுஎஸ்ஏ (USA) மற்றும் மெக்சிகோ (Mexico) போன்ற நாடுகளுக்கான இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களை (International Roaming Plans) அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.898 விலையிலிருந்து திட்டங்கள் தொடங்குகின்றன. இந்த திட்டங்களின் முழு விவரம் இதோ.
ஜியோ யுஏஇ திட்டங்கள் (Jio UAE Plans): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) நாடுகளுக்கு இன்கமிங் (Incoming) மற்றும் அவுட்கோயிங் (Outgoing) கால்களை செய்வதற்கும், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை அனுப்புவதற்கும் மொத்தமாக 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜியோ ரூ 898 திட்ட விவரங்கள் (Jio Rs 898 Plan Details): இந்த யுஏஇ ரோமிங் திட்டத்தில் 100 நிமிடங்களுக்கு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம். இதற்கு 7 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ 1598 திட்ட விவரங்கள் (Jio Rs 1598 Plan Details): இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக 150 நிமிடங்களுக்கு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். இந்த யுஏஇ திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 2998 திட்ட விவரங்கள் (Jio Rs 2998 Plan Details): இந்த திட்டத்தில் 250 நிமிடங்களுக்கு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களை செய்யலாம். 7 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு பேகோ (PayGo) கட்டணங்கள் பொருந்தும்.

ஜியோ யுஎஸ்ஏ, மெக்சிகோ திட்டங்கள் (Jio USA, Mexico Plans): இந்தியாவில் இருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் (United States of America), யுஎஸ் வெர்ஜின் ஐலேண்ட்ஸ் (US Virgin Islands) மற்றும் மெக்சிகோ (Mexico) ஆகிய நாடுகளுக்கு அவுட்கோயிங் கால்களை செய்வதற்காக 3 திட்டங்கள் இருக்கின்றன.
ஜியோ ரூ 1555 திட்ட விவரங்கள் (Jio Rs 1555 Plan Details): இந்த யுஎஸ்ஏ ரோமிங் திட்டத்தில் 150 நிமிடங்களுக்கு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். அதேபோல 7 ஜிபி டேட்டா மற்றும் 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ 2555 திட்ட விவரங்கள் (Jio Rs 2555 Plan Details): இந்த திட்டத்தில் 250 நிமிடங்களுக்கு இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களை செய்யலாம். 15 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 10 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 3455 திட்ட விவரங்கள் (Jio Rs 3455 Plan Details): இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. 250 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் 25 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்களை செய்யலாம். இந்த திடங்களுக்கும் பேகோ கட்டணங்கள் பொருந்தும்.
ஜியோ ரூ 2799 திட்ட விவரங்கள் (Jio Rs 2799 Plan Details): இந்த திட்டத்தில் இந்தியாவில் இருந்து யுஎஸ்ஏ, யுஏஇ உள்ளிட்ட 51 நாடுகளில் இன்கமிங், அவுட்கோயிங் கால்களை செய்து கொள்ளலாம். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் 100 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது.
இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபு தாபி போன்ற நாடுகளுக்கு வேலைக்கு சென்ற பல லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களது குடும்பங்களுடன் சற்று குறைவான கட்டணத்தில் பேசிக்கொள்ள முடியும் என்பதால், இந்த திட்டங்கள் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








