Home
News

எனக்கு போட்டியே இல்ல.. மாதாந்திரம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் (Telecom) நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கட்டண உயர்வுக்கு பிறகு படாதபாடுபட்டு வருவதாக கூறப்பட்டாலும், ஜியோ செய்துள்ள சம்பவம் மற்ற நிறுவனங்களை கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இருப்பதை மறுக்கமுடியாது. பிஎஸ்என்எல் நிறுவனம்கூட கொடுக்க முடியாத சலுகைகளை மலிவான விலைக்கு களமிறக்கி போட்டிக்கு ஆளில்லாத நிலையை உருவாக்கி இருக்கிறது. மாதம் ரூ.75 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகையை வாரி வழங்குகிறது.

இப்படி மொத்தமாக 7 ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plans) மலிவு விலையில் கொடுக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி வேகத்தில் சலுகைகளை கொடுப்பதால் மட்டுமே, இப்போதைக்கு விலை மிகவும் மலிவாக இருக்கிறது. ஆனால், அதே மலிவான விலையில் 4ஜி வேகத்தில் சலுகைகளை கொடுத்து ஜியோ நிறுவனம் தனித்து நிற்கிறது. இப்போது ஒவ்வொரு திட்டங்களையும் பார்ப்போம்.

எனக்கு போட்டியே இல்ல.. மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதம் வெறும் ரூ.75 செலவில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகிறது.

இந்த திட்டத்தில் 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவை ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி என்ற கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ் என்கிற சலுகையை 336 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது.

மேலும், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சலுகைகளையும் 336 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மிகவும் மலிவான விலைக்கு வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாகும். இப்போது மற்ற திட்டங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ 75 திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாள்தோறும் 100 எம்பி டேட்டா, 50 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. முந்தைய திட்டத்தை போல ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது. ஜியோ ரூ 91 திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

நாள்தோறும் 100 எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. ஜியோ ஆப்களின் சலுகையும் வருகிறது. ஜியோ ரூ 125 திட்டத்தில் 23 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது. நாள்தோறும் 500 எம்பி டேட்டா கிடைக்கிறது. மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 152 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகள் வருகிறது. ஜியோ ரூ 186 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 100 எஸ்எம்எஸ் வருகிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோ ஆப்களிள் சலுகை வருகிறது. ஜியோ ரூ 223 திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வருகிறது. இந்த திட்டங்கள் ஜியோபோன்ககளுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் மலிவான விலைக்கு கிடைக்கும் 4ஜி திட்டங்கள் இவை மட்டுமேயாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 895 Plan With Unlimited Voice Calls 2GB Data 336 Days Validity Check Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X