இனி போட்டி இல்ல.. மாசம் ரூ.74-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் கால்கள்.. 2GB டேட்டா!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கட்டண உயர்வுக்கு பிறகும் அடிமட்ட விலையிலான திட்டங்களை கொடுக்கிறது. சொல்லப்போனால், முக்கியமான திட்டத்தின் சலுகைகளில் கை வைக்காமல் அப்படியே வைத்திருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் மாதத்துக்கு ரூ.74 செலவில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவை கொடுக்கிறது. இந்த 336 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் (336 Days Validity Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனமான ஜியோவானது, அடிமட்ட விலைக்கு 4ஜி திட்டங்களை (4G Plans) கொடுக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் மலிவு விலையில் திட்டங்கள் இருந்தாலும், முக்கால்வாசி கஸ்டமர்கள் 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) இன்னும் கிடைக்கவில்லை.

ஒருவேளை 4ஜி திட்டங்கள் வந்தால், விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால், வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகைகள் குறைக்கப்பட்டுவிடும். ஆனால், அப்போதும் ஜியோவில் அடிமட்ட விலையில் 4ஜி திட்டங்கள் இருக்கும். ஏனென்றால், டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்த பிறகும்கூட ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் (JioPhone) திட்டங்கள் மாறவில்லை.
பழையபடி அதே விலையில் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டங்கள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் மலிவான 4ஜி திட்டங்களாக இருக்கப் போகின்றன. இதில் அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டமாக ரூ.895 விலையிலான திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் 336 நாட்களுக்கு கிடைப்பதால், அதிக லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது.
ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை அடிமட்டமாக இருந்தாலும், வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 336 நாட்களுக்கு வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் செய்யலாம்.
இதுபோக ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. ஆனால், டேட்டா மட்டும் 28 நாட்களுக்கு 2 ஜிபி வீதம் கொடுக்கப்படும். அதாவது, 12 மாதங்களுக்கு மாதாமாதம் 2 ஜிபி என்னும் கணக்கில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த மாதாந்திர டேட்டாவை 28 நாட்களுக்கு முன்பே பயன்படுத்திவிட்டால், போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
ஆகவே,64 கேபிபிஎஸ் வேகத்தில் அடுத்த மாதத்தின் டேட்டா கிடைக்கும் வரையில் பயன்படுத்தலாம். இந்த டேட்டா சலுகையை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ்கள் என்ற கணக்கில் 12 மாதங்களுக்கு வழங்கப்படும். அடிமட்ட விலையில் திட்டம் கிடைப்பதால், தேவைக்கு ஏற்ப சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் கூடுதல் சலுகையும் இருக்கிறது.
அதாவது, ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற ஆப்களையும் இந்த வருடாந்திர திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.74.58 மட்டுமே செலவாகிறது. இந்த விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி திட்டங்கள் கிடையாது. ஒருவேளை தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ.223 திட்டத்தை பெறலாம்.
இந்த ஜியோ ரூ 223 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஆனால், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டமும் மிகவும் மலிவான விலையில் அதிக சலுகை கொண்ட திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








