மனமிரங்கிய அம்பானி.. மலிவு விலையில் Jio 336 நாள் பிளான்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் பயனர்களுக்காக ஒரு புதிய நீண்ட நாள் ரீசார்ஜ் திட்டத்தை 336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 336 days validity plan) உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோ (Jio) பிளானை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், அடுத்த 336 நாட்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும்? இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio prepaid plan) யாருக்கெல்லாம் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.
குறைந்த செலவில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை (Jio low cost long term validity plans) தேடும் ஜியோ வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தை மிஸ் செய்யவே கூடாது. சரி, இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. ஜியோ நிறுவனம் இந்தியாவில் சுமார் 46 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது. கடந்த வருடத்தில் டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்த திடீர் விலை ஏற்றத்திற்கு (Jio price hike) பிறகு, நிறுவனம் பல மாற்றங்களை அறிவித்து கொண்டே இருக்கிறது.

மனமிரங்கி வந்த அம்பானி.. மலிவு விலையில் 336 நாள் பிளான்:
தொலைத்தொடர்பு துறையில் (Telecom sector) ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க ஜியோ நிறுவனம் இப்போது பல்வேறு விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை விலை வாரியாகவும், வேலிடிட்டி வாரியாகவும் பிரித்து வழங்கி வருகிறது. அப்படி, குறைந்த செலவில் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டத்தை தேடும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ஜியோ நிறுவனம் இப்போது 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம் (Jio 336 days validity plan) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ரூ. 895 திட்டம் (Jio Rs 895 Plan) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் திட்டங்கள் எல்லாம் 1000 ரூபாய் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் கிடைத்து வரும் நிலையில், ஜியோ நிறுவனம் 1000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் 1 வருடத்திற்கு நெருக்கமான வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
ஜியோ ரூ. 895 திட்டம் (Jio Rs 895 Plan):
ஜியோ ரூ. 895 திட்டம் (Jio Rs 895 Plan) 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (local) மற்றும் எஸ்டிடி (STD) அழைப்பு நன்மைகளை (unlimited voice calls) வழங்குகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. நீங்கள் ரீசார்ஜ் செய்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒருமுறை இந்த SMS நன்மை அப்டேட் செய்யப்படும்.
அதேபோல், இந்த திட்டம் ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒரு முறை உங்களுக்கு 2GB டேட்டா நன்மையை (2GB data for 28 days) வழங்குகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 2GB டேட்டா என்ற வகையில் 336 நாட்களுக்கு நீங்கள் மொத்தமாக 24GB டேட்டா நன்மையை பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டதை ஜியோ நிறுவனம் அதன் தீவிரமான ஜியோ பயனர்களுக்கு (real Jio users) மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருங்க அந்த Jio தீவிரமான வாடிக்கையாளர்கள்?
ஆம், ஜியோவின் தீவிரமான பயனர்களுக்கு (Jio real customers) மட்டுமே இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஜியோவின் தீவிரமான பயனர்கள் என்று குறிப்பிடுகையில், ரிலையன்ஸ் நிறுவனம் அதன் ஜியோ போன் (Jio Phone) பயனர்கள் மற்றும் ஜியோ பாரத் (Jio Bharat) பயனர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வழக்கமான ஸ்மார்ட்போனில் ஜியோ சிம் (Jio SIM) பயன்படுத்தினால், துரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.


Click it and Unblock the Notifications








