Home
News

அம்பானிக்கு கும்பிடு.. வெறும் ரூ.895 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

'இதுக்குமேல கம்மி கொடுக்க முடியாது' என்று அடித்து சொல்லும் அளவுக்கு வெறும் ரூ 895 விலை கொண்ட திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டம் குறித்த விவரம் இதோ.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.

ரூ.895 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

அதோடு 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படும். அதாவது, மொத்தமாக 12 மாதங்களில் 28 நாட்கள் வீதம் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும். ஆகவே, ஒரு மாதத்தில் 28 நாட்களுக்கு இந்த டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தலாம்.

அதன்பின் வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமே கிடைக்கும். அடுத்த மாதத்தின் 1ஆம் தேதி வந்துவிட்டால், மீண்டும் அந்த 28 நாட்களுக்கான டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டுவிடும். இப்படி, 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த 2ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும், இந்த திட்டத்தில் ஒரு வருடத்துக்கு வாய்ஸ் கால் சலுகைகள் கிடைப்பதால், மிகுந்த சலுகை கொண்டதாகவே தெரிகிறது.

ரூ.895 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

இந்த திட்டம் ஜியோபோன் (JioPhone) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். ஒருவேளை ஜியோபோன் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு கம்மியான விலையில் ஒரு வருட திட்டம் வேண்டுமானால், மாதத்துக்கு ரூ.212 செலவில் கிடைக்கும் பிரீபெய்ட் திட்டமொன்று இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 2545 திட்ட விவரங்கள் (Jio Rs 2545 Plan Details): இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருடமாகும்.

இந்த வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 504 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி விட்டாலும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) கால் சலுகைகளை செய்து கொள்ளலாம்.

அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் ஒரு வருடத்துக்கான சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும், இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த ஆஃபரை பெறும் வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் ஏரியாக்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

ரூ.895 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால் வெறும் ரூ.212 மட்டுமே தேவைப்படுகிறது. சொல்லப்போனால், ஜியோவில் மிகவும் கம்மியான விலையில் கிடைக்கும் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டம் இது மட்டுமேயாகும். மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஒப்பிடுகையில், இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதிகப்படியான சலுகைகளையே கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Rs 895 Plan With 336 Days Validity, 2GB Data, Unlimited Voice Call Check One Year Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X