இனி நெருங்க முடியாது.. மாதம் ரூ.81-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அம்பானி இறக்கிய திட்டம்.. மொத்தமா முடிந்தது!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை என்னதான் அதிகரித்தாலும், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு நிகரான அதிவேக டேட்டா சேவையை கொடுக்க இன்றளவும் அந்த நிறுவனம் சிரமப்பட்டுதான் வருகிறது. சொல்லப்போனால், அடிமட்ட விலையில் திட்டங்கள் கிடைத்தாலும், அது 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால், ஜியோ நிறுவனம் அதையும் விட்டுவைக்கவில்லை. ஜியோபோன் பிரைமா திட்டங்கள் மூலம் பிஎஸ்என்எல்லுக்கு நிகராக அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுத்தது மட்டுமல்லாமல், அதை தூக்கிச்சாப்பிடும்படி 4ஜி வேகத்தை களமிறக்கியிருக்கிறது.
டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறிய கஸ்டமர்கள், அதில் கிடைக்கும் டேட்டா வேகம் போதவில்லை. மலிவான விலைக்கு அதிக டேட்டா கொடுத்தாலும், அதிகபட்சம் 2ஜி அல்லது 3ஜி வேகத்தில்தான் பயன்படுத்த முடிகிறது என்று தெரிவிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் மார்கெட் இருந்த நிலையாகும்.

ஆனால், இதே விலைக்கு ஜியோபோன் பிரைமா திட்டங்கள் கிடைக்கின்றன. மாதத்துக்கு வெறும் ரூ.81 செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டமும் அதில் இருக்கிறது. பிஎஸ்என்எல்லை போலல்லாமல் நாடு முழுவதும் 4ஜி வேகத்தில் இந்த திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி மலிவான கிடைக்கும் 3 நல்ல திட்டங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ 186 திட்ட விவரங்கள் (Jio Rs 186 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் முக்கிய சலுகையான அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்கள் வருகிறது.
இதுபோக ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோசினிமா (JioCinema) ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஆப்களின் வீடியோக்களை 4ஜி வேகத்தில் பார்த்து கொள்ள முடியும். அதேபோல யூடியூப்,பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஆப்களையும் அதிவேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதைவிட அதிக டேட்டா வேண்டுமானால், பின்வரும் திட்டத்துக்கு செல்லலாம்.
ஜியோ ரூ 223 திட்ட விவரங்கள் (Jio Rs 223 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோ டிவி மற்றும் ஜியோசினிமா சந்தாவை பெறலாம். ஆனால், 28 நாட்களில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை கிடைக்கிறது. ஆகவே, 56 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இதற்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தால் வெறும் ரூ.81 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, 4ஜி வேகத்தில் கிடைக்கும் மலிவான திட்டம் இது என்று தாராளமாக சொல்லலாம். இந்த 336 நாட்களில் என்னென்ன சலுகை வருகிறது?
இந்த திட்டத்தில் 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 336 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் 28 நாட்கள் கணக்கில் 336 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, 12 மாதங்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஒருவேளை 28 நாட்களுக்குள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








