அதான் அம்பானி.. ரூ.895 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!
ஜியோ கஸ்டமர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்கப்போகும் ப்ரீபெய்ட் திட்டங்களில், ஜியோபோன் ப்ரைமாவில் வெறும் ரூ 895 விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ரூ.75 முதல் திட்டங்கள் இருக்கின்றன. விவரம் இதோ.
ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 50 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள கொள்ளலாம். இந்த திட்டத்தின் டேட்டா சலுகையை பொறுத்தவரையில், 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஆகவே, மொத்தமாக 336 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆப்கள் சந்தா கிடைக்கிறது.
இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.74 மட்டுமே செலவாகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் நல்ல சலுகைகள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாகவே இருக்கிறது. இதேபோல மேலும் 6 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. ரூ.75 ரூபாய் முதல் ரூ.223 வரையில் அசத்தலான சலுகைகளை கொண்டுள்ளன.
ஜியோ ரூ 223 திட்ட விவரங்கள் (Jio Rs 223 Plan Details): இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது.
ஜியோ ரூ 186 திட்ட விவரங்கள் (Jio Rs 186 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் சலுகை மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.
ஜியோ ரூ 152 திட்ட விவரங்கள் (Jio Rs 152 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ 125 திட்ட விவரங்கள் (Jio Rs 125 Plan Details): இந்த திட்டத்திலும், தினசரி 500 எம்பி டேட்டா வீதம் 23 நாட்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தைப் போலவே மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகையை பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 91 திட்ட விவரங்கள் (Jio Rs 91 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி 100 எம்பி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 50 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோகிளவுட் சலுகை மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை வருகிறது.


Click it and Unblock the Notifications








