Home
News

அம்பானி ஆட்டம்.. வெறும் ரூ.895 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

ஒட்டுமொத்த டெலிகாம் மார்கெட்டே திரும்பி பார்க்கும்படி ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடலுக்கு வெறும் ரூ 895 விலையில் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இப்படி மொத்தமாக 7 ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன.

ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதுபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களை பயன்படுத்தலாம்.

வெறும் ரூ.895 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 91 திட்ட விவரங்கள் (Jio Rs 91 Plan Details): இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 125 திட்ட விவரங்கள் (Jio Rs 125 Plan Details): இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 500 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது.

ஜியோ ரூ 152 திட்ட விவரங்கள் (Jio Rs 152 Plan Details): இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 186 திட்ட விவரங்கள் (Jio Rs 186 Plan Details): இந்த திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 223 திட்ட விவரங்கள் (Jio Rs 223 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த திட்டத்தில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் வழங்கப்படுகிறது.

வெறும் ரூ.895 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதோடு நாளொன்றுக்கு 50 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஒரு மாதத்தில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் 12 மாதங்களுக்கு சலுகை கிடைக்கிறது. இந்த மாதங்களில் முதல் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அப்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் 28 நாட்களுக்கும் இந்த டேட்டா 2 ஜிபியை பயன்படுத்தலாம்.

இதற்கிடையில் வாய்ஸ் கால் சலுகைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. கிடைக்கும். இந்த 2 ஜிபி டேட்டாவையும் வாடிக்கையாளர்கள் முழுவதும் பயன்படுத்திவிட்டால் கூட ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், முந்தைய திட்டங்களை போலவே ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.74 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, மிகுந்த சலுகை கொண்டதாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 895 Plan 2GB Data, Unlimited Voice Call 336 Days Validity Check JioPhone Prima One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X