Home
News

அறக்க பறக்க ரீசார்ஜ்.. அடுத்த 84 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா, எஸ்எம்எஸ்.. ஓடிடி, மியூசிக் சந்தா!

ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட வேலிடிட்டியுடன் பல்வேறு கூடுதல் சலுகைகளை பெற வேண்டுமானால் ரூ.889 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஏஐ சேவைகளுக்கான பல்வேறு சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.889 திட்ட விவரங்கள் (Jio Rs 889 Plan Details): இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 84 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவானது 4ஜி வேகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். போஸ்ட் டேட்டாவும் உள்ளது.

அறக்க பறக்க ரீசார்ஜ்.. அடுத்த 84 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!

அதாவது, நாளொன்றுக்கு கொடுக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சலுகையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதனால் லோக்கல் கால்கள் (Local Calls), எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை (STD & Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இப்போது, கூடுதல் சலுகைகளை தெரிந்து கொள்ளாலம். ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. ஆகநே, இதில் பிரீமியம் அணுகலை பெற்று கொள்ளலாம். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோக, ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோவின் இந்த ரூ.889 திட்டத்தில் ஜியோ ஸ்பெஷன் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் வழங்கப்படுகிறது.

இந்த ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஹாட்ஸ்டார் சந்தாவை பெறுவதற்கு ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே மொபைல் நம்பரை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோக ஜெமினி ப்ரோ சந்தாவையும் (Gemini Pro Subscription) இந்த ஜியோ ரூ.889 திட்ட கொடுத்து இருக்கிறது. இதில் 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது.

நானோ பனானா உள்ளிட்ட அணுகல்களும் கிடைக்கும். இதைவிட கம்மியான விலைக்கு ஜியோசாவன் ப்ரோ சந்தாவை பெற வேண்டுமானால், ஜியோ ரூ.329 திட்டத்தை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

64 கேபிபிஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். ஜியோசாவன் ப்ரோ சந்தா கிடைக்கும். ஜெமினி ப்ரோ சந்தா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் இந்த திட்டம் கொடுக்கும். இதில் ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்கள் பயன்படுத்தலாம். ஜெமின் ப்ரோவை 18 மாதங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 889 Plan With JioSaavn Pro Unlimited Voice Calls 1.5 GB Data 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X