Home
News

ஒரே ஜியோ ரீசார்ஜ்.. 16 மாதங்கள் வேலிடிட்டி.. 12 OTT சந்தா.. 1000 டிவி சேனல்கள்.. டேட்டா.. எந்த திட்டம்?

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வீட்டு பிராட்பேண்ட் பயனர்களுக்காக ரூ.8,888 மதிப்பிலான நீண்டகால திட்டத்தை வழங்குகிறது. "Freedom Pack" என அழைக்கப்படும் இந்த திட்டம் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு அருமையான திட்டம் ஆகும்.

ஜியோவின் ரூ.8,888 திட்டத்தில் பல்வேறு OTT சேவைகளுக்கான சந்தா உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே ஜியோ ரீசார்ஜ்..16 மாதங்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.8,888 திட்டத்தில் (Reliance Jio Rs 8888 Home Plan) மொத்தம் 12 OTT சேவைகளுக்கான நன்மைகள் கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 12 மாதங்களாக இருக்கும் நிலையில், பயனர்களுக்கு கூடுதலாக 4 மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மூலம் மொத்தமாக 16 மாதங்கள் வரை வேலிடிட்டியை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக இந்தத் திட்டத்தின் மாதச் செலவு ரூ.555 ஆகும். நீண்டகால பிராட்பேண்ட் இணைப்புடன் OTT சலுகைகளையும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கிறது. '

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.8,888 ஹோம் பிளான் (Reliance Jio Rs 8888 Home Plan) மூலம் பயனர்கள் அதிகபட்சமாக 30 Mbps வேகத்தில் Download மற்றும் Upload சேவையைப் பெறலாம். இதனுடன் Landline இணைப்பு மூலம் இலவச Voice Calling வசதியும் வழங்கப்படுகிறது. இருப்பினும், Landline பயன்படுத்த தேவையான கருவியை பயனர்களே தனியாக வாங்க வேண்டும்.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) என மொத்தம் 12 OTT தளங்களுக்கான அணுகல் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதேபோல் இந்த திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட Live TV சேனல்களையும் பயனர்கள் இலவசமாகப் பார்க்கும் வசதி கிடைக்கிறது. இதனால் பிராட்பேண்ட் இணைப்புடன் பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் லைவ் டிவி நிகழ்ச்சிகளை ஒரே தொகுப்பில் அணுக முடியும்.

டேட்டா பயன்பாட்டைப் பொறுத்தவரை, AirFiber இணைப்பில் ஒரு மாதத்திற்கு 1,000GB FUP டேட்டா வழங்கப்படுகிறது. அதேசமயம் Fiber இணைப்பைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3.3TB வரை டேட்டா கிடைக்கிறது. எனவே, அதிக இணைய பயன்பாடு மற்றும் OTT பொழுதுபோக்கு சேவைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த நீண்டகால ஜியோ திட்டம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

ஒரே ஜியோ ரீசார்ஜ்..16 மாதங்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோவின் Home Broadband திட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. குறிப்பாக AirFiber சேவையின் மூலம், பாரம்பரிய Fiber இணைப்புகள் சென்றடையாத பகுதிகளிலும் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் வசதியை விரைவாக விரிவுபடுத்தியுள்ளது. இதனால் அதிகமான பயனர்கள் வீட்டு இணைய சேவையை எளிதாகப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.8,888 என்ற மொத்த தொகை முதலில் அதிகமாகத் தோன்றினாலும், மாதத்திற்கு 30 Mbps வேகமே போதுமானதாக இருக்கும் பயனர்களுக்கு இந்த நீண்டகால திட்டம் பயனுள்ளதாக இருக்கலாம். நீண்டகால இணைய சேவையுடன் OTT உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் பெற விரும்புவோருக்கு இது பரிசீலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Rs 8,888 Home Plan: Check Benefits, Validity and Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X