Home
News

கேபிள் TV-க்கு பெரிய அடி.. 1000+ TV சேனல்கள்.. 13+ ஓடிடி சந்தா.. 30 Mbps வேக டேட்டா.. ரூ.899+ GST போதும்!

கேபிள் டிவிக்கு போட்டியாக லைவ் டிவி சேனல்களை கொடுத்து, கூடவே பிரீமியம் ஓடிடி ஆப்கள், வை-பை காலிங் மற்றும் ஃபைபர் டேட்டாவை ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாமல், டிவிகளிலும் இந்த சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

ஜியோ ஹோம் ரூ.888 திட்ட விவரங்கள் (Jio Home Rs 888 Plan Details): இந்த திட்டத்தில் வை-பை ரூட்டர் கொடுக்கப்படும். இந்த ரூட்டர் வழியாக 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுவொரு போஸ்ட்பெய்ட் ஃபைபர் திட்டமாக இருக்கிறது. ஆகவே, 1 மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படும்.

கேபிள் TV-க்கு பெரிய அடி.. 1000+ TV சேனல்கள்.. 13+ ஓடிடி சந்தா!

30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைத்தாலும், 1 மாதத்தில் அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த 1000 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் கால்களையும் செய்து கொள்ளலாம். இது வை-பை கால்களாக இருக்கும்.

1000+ லைவ் டிவி சேனல்களை பெறலாம். இது 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக கொடுக்கப்படும். ஓடிடி ஆப்களை பார்க்கையில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடிகள் கிடைக்கும். மேலும், சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5) உள்ளன.

இதுபோக சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் டைம்ஸ்பிளே (TimesPlay) கிடைக்கிறது. தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தை முதல்முறை பெறுவதற்கு 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை செலுத்த வேண்டும். கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். அதேபோல ஜியோ ஏர்ஃபைபர் அல்லது ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும். லைவ் டிவி சேனல்களை மொபைலிலும் பெறலாம்.

இதற்கான திட்டமாக ஜியோ ரூ.200 திட்டம் இருக்கிறது. இதிலும் 1000+ லைவ் டிவி சேனல்களை கிடைக்கும். பிரீமியம் சேனல்கள் உள்பட கிடைக்கும். கலர்ஸ் டிவி சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) வழியாக பெற்று கொள்ளலாம். மேலும், சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) சேனல்களை ஜியோ டிவி (Jio TV) வழியாக பெறலாம்.

இதுபோக வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி (Warner Bros. Discovery), ஈடிவி (ETV) உள்ளிட்டவற்றின் டிவி சேனல்களும் ஜியோ டிவி ஆப் வழியாக கொடுக்கப்படும். மேலும், யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ் மற்றும் ஜீ5 ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி+ உள்ளன.

சன் நெக்ஸ்ட், ஹோய்சோய், கான்சா லங்கா (Kanccha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைமஸ்பிளே (Times Play), தாரங்பிளஸ் (Tarang Plus) மற்றும் ஜியோ டிவி கிடைக்கிறது. இந்த லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை ஸ்மார்ட்போனில் பார்த்து கொள்ளலாம். முந்தைய திட்டம் டிவியில் கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 888 Plan With GST 1000 TV Channels 30 Mbps Speed Data 13 OTT Apps Check Home Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X