Home
News

Jio கெத்து.. குறைந்த விலையில் 15 OTT சேனல் சந்தா.. 3.3TB வரையிலான டேட்டா.. எல்லோரும் மாறும் புது திட்டம்..

ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த, மிகவும் குறைந்த விலையில் 15 வகையான ஓடிடி (OTT) சேனல் சந்தாவை 1TB டேட்டா மற்றும் 3.3TB டேட்டா நன்மையோடு வழங்கி வியப்படைய செய்துள்ளது. இந்த திட்டம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

மக்களின் ஆதரவை பெற்ற முன்னணி டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் (Reliance) குழுமத்தின் ஜியோ நிறுவனம் திகழ்கிறது. தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களை தன்வசமே வைத்துக்கொள்ள, முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், ஜியோ நிறுவனம் தற்போது வெறும் ரூ. 888 என்ற விலையில் புதிய திட்டத்தை பல நன்மைகளை அடக்கிய ஒரு பண்டல் திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.

Jio கெத்து.. குறைந்த விலையில் 15 OTT சேனல் சந்தா.. 3.3TB வரை டேட்டா..

ஜியோ ரூ. 888 திட்டம் (Jio Rs 888 Plan):

ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் ஒரு போஸ்ட்பெய்டு (Postpaid) திட்டம் போல மாதாந்திர கட்டணத்தை பெறுகிறது. இந்த திட்டம் உண்மையில் ஜியோஏர்ஃபைபர் (Jio AirFiber) மற்றும் ஜியோஃபைபர் (JioFiber) பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ப்ரீபெய்ட் (Jio Prepaid) பயனர்கள் விரும்பினால் கூட, இந்த திட்டத்திற்கு மாறியபின் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஜியோ ரூ. 888 திட்டம் 15 வகையான ஓவர்-தி-டாப் (OTT) பிரீமியம் சேனல்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதுவொரு பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் உங்களுக்கு 30Mbps வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் 15 OTT சேனல் நன்மையை வழங்குகிறது. இதில் நெட்ஃபிலிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற சேனல்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு வரை Jio நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நன்மையை எந்தவொரு அடிப்படை திட்டத்திற்கும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நன்மையோடு கிடைக்கும் திட்டங்கள் ரூ. 1499 விலைக்கு மேல் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரூ. 1499 திட்டம் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் கீழ் வருகிறது. இப்போது, ஜியோ நிறுவனம் முதல் முறையாக 30Mbps வேகம் கொண்ட அடிப்படை திட்டத்துடன் நெட்ஃபிலிக்ஸ் நன்மையை வழங்குகிறது.

Jio கெத்து.. குறைந்த விலையில் 15 OTT சேனல் சந்தா.. 3.3TB வரை டேட்டா..

ஜியோ ஏர்ஃபைபர் பயனருக்கு 1TB.. ஜியோஃபைபர் பயனருக்கு 3.3TB டாட்டா (Jio AirFiber Users Get 1TB.. JioFiber Users Get 3.3TB Data):

இந்த திட்டம் சோனி லைவ் (Sony Liv), ஜீ5 (Zee5), லயன்ஸ்கேட் (Lionsgate), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), ஆல்ட்பாலாஜி (AltBalaji) போன்ற திட்டத்துடன் இணைந்த அனைத்து OTT பயன்பாடுகளின் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்குகிறது. இந்த புதிய ஜியோ ரூ 888 திட்டம் (Jio Rs 888 Plan) எவ்வளவு டேட்டா நன்மையை வழங்கும் என்று பார்க்கலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு இந்த திட்டம் FUP கட்டுப்பாட்டுடன் 1TB டேட்டாவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு இந்த ஜியோ ரூ. 888 திட்டம் மொத்தமாக 3.3TB டேட்டா நன்மையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஜியோ ஏர்ஃபைபர் அல்லது ஜியோஃபைபர் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திற்கு அவர்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல், சில பயனர்கள் அவர்களுடைய அதிக விலை கொண்ட திட்டத்தில் இருந்து இந்த திட்டத்திற்கு தரமிறக்கம் செய்ய விரும்பினாலும் செய்துகொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கிறது. இது தவிர, ஜியோ தன் தனா தன் (Jio Dhan Dhana Dhan - DDD) என்ற ஐபிஎல் (IPL) சலுகையையும் வழங்குகிறது.

இந்தச் சலுகையின் கீழ், தகுதியான பயனர்கள் தங்கள் ஜியோ ஹோம் பிராட்பேண்ட் இணைப்புகளில் (JioFiber மற்றும் Jio AirFiber வாடிக்கையாளர்களுக்கு) 50 நாள் தள்ளுபடி கிரெடிட் வவுச்சரைப் பெறுவார்கள். இருப்பினும், இது மே 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 888 Plan For Jio AirFiber and Jio Fiber Users With Upto 3.3TB Data and 15 OTT Channel Benefits Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X