Jio சிம் இருக்கா? இந்த பிளான் போட்டா.. 3 மாசத்துக்கு ஃப்ரீ உணவு டெலிவரி.. அள்ளிக்கொடுத்து அசத்திய அம்பானி..
நீங்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் (Food order) செய்பவரா? அல்லது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா? அப்படியானால் ஜியோ (Jio) உங்களுக்கு ஒரு சூப்பர் மேட்டரை வழங்கியுள்ளது. இனி ஃப்ரீயா உணவு ஆர்டர் செய்யலாம்.
ஜியோ தனது வடிக்கையாளர்களுக்காக தற்போது ஒரு சூப்பரான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டம் டேட்டா (data), வாய்ஸ் கால் (voice call), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோவின் பல இலவச நன்மைகளை வழங்குவதோடு இலவசமாக 3 மாத ஸ்விகி (Swiggy) ஃப்ரீ டெலிவரி நன்மையுடன் இன்னும் ஏராளமான இலவச நன்மை மற்றும் டபுள் கேஷ் பேக் நன்மைகளை இந்த புதிய திட்டம் வழங்குகிறது.

Jio சிம் இருக்கா? அப்போ இந்த பிளானை ரீசார்ஜ் செய்யுங்க.. இலவசமா ஸ்விகி ஃப்ரீ டெலிவரி பெருங்க (Do You Have Jio SIM Then Recharge This Plan to Get Free Swiggy Food Delivery):
இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio prepaid recharge plan) ரூ.866 விலையில் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை (high speed data benefits) வழங்குகிறது. இத்துடன் ஜியோ வழக்கமாக வழங்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த ஜியோ ரூ 866 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 866 Prepaid Plan) 84 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் (prepaid plan) தினசரி 2GB டேட்டாவை வழங்கி, மொத்தமாக 168GB ஹை-ஸ்பீட் டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது ரூ. 50 மதிப்பிலான கேஷ் பேக் நன்மையை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இத்திட்டத்துடன் எண்ணற்ற இலவச நன்மைகளை சேர்த்துள்ளது.
இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஜியோ வழங்கும் ஸ்விகி ஒன லைட் (Swiggy One Lite) என்ற இலவச ஃப்ரீ ஃபுட் டெலிவரி நன்மை கிடைக்கிறது. ஆம், இந்த ஜியோ ரூ 866 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ.600 மதிப்பிலான Swiggy One Lite இலவச 3 மாத கால சந்தா பயன்படுத்த கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஸ்விகி வழியாக ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு ஃப்ரீ டெலிவரி வழங்கப்படும்.

3 மாசத்துக்கு இலவச உணவு டெலிவரி சந்தா.. இலவசங்களை அள்ளிக்கொடுக்கும் அம்பானி:
அதாவது, ஸ்விகி டெலிவரி சார்ஜஸ் என்று வசூலிக்கும் விநியோக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உங்கள் உணவு உங்களுக்கு இலவசமாக டெலிவரி செய்யப்படும். இதன் மூலம் ஒவ்வொரு ஆர்டரிலும் ரூ. 50 வரை உங்களால் சேமிக்க முடியும். இது தவிர, இந்த ஸ்விகி ஒன் லைட் சந்தாவின் கீழ், உங்களுக்கு ரூ. 199 கட்டணத்திற்கு மேலான இன்ஸ்டாமார்ட் (Instamart) ஆர்டர்களுக்கு 10 ஹாம் டெலிவரி (home delivery) இலவசமாக கிடைக்கிறது.
உணவு மற்றும் இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு சர்ஜ் ஃபீஸ் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இது தவிர 30% எக்ஸ்டரா தள்ளுபடியும் கிடைக்கிறது. அதேபோல் ஸ்விகி ஜெனி (Swiggy Genie) மூலம் ரூ.60 கட்டணத்திற்கு மேல் ஆர்டர் செய்யும் பொழுது கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன் அம்பானி இன்னும் பல இலவசங்களை அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளார். இதில் ஜியோவின் சொந்த ஜியோ சேவைகளுக்கான சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது.
இதில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சேவைகளின் சந்தா கிடைக்கிறது. இத்துடன் இந்த திட்டம் ஜியோ வழங்கும் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (unlimited true 5g data) நன்மையையும் வழங்குகிறது. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனம் (5G smartphone or mobile) இருந்து, நீங்கள் ஜியோவின் 5ஜி வட்டத்திற்குள் இருந்தால், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








