ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம்.. OTT.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி? முழு விபரம் இதோ!
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பட்ஜெட் வலையில் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது ஜியோ (jio) நிறுவனம். அதுவும் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி சந்தா உடன் ப்ரீபேய்ட் திட்டங்களை வழங்குவதால் பலர் இதில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக நாட்கள் வேலிடிட்டி உடன் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதன்படி மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும். மேலும் ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி, வாய்ஸ் கால்கள், அதிக டேட்டா உள்ளிட்ட நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா வேண்டும் என்றால் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
மேலும் கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








