Jio-க்கு இதை விட்டா போச்சு.. அடுத்த 84 நாட்களுக்கு 5ஜி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். மலிவான விலைக்கு 3 மாதங்களுக்கு 5ஜி டேட்டா வேண்டுமானால், இதுவே ஒரேவொரு தேர்வாக இருக்கிறது.
4ஜி திட்டங்களுக்கு நிகராக 5ஜி திட்டங்களும் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகின்றன. ஏனென்றால், இப்போது வரை 5ஜி டேட்டாவுக்கு எந்த லிமிட்டும் கிடையாது. அதேபோல கட்டணமும் கிடையாது. 4ஜி திட்டங்களிலேயே இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ ரூ.859 திட்டம் (Jio Rs 859 Plan) கிடைக்கிறது.

ஜியோ ரூ.859 திட்ட விவரங்கள் (Jio Rs 859 Plan Details): டெலிகாம் நிறுவனங்களின் கணக்குப்படி 28 நாட்களே 1 மாதமாக இருக்கிறது. அதன்படி 3 மாதங்களுக்கு இந்த திட்டம் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 84 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் அந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இது 5ஜி கஸ்டமர்களாக இருந்தால் பயன்படுத்தி கொள்ளலாம்.
4ஜி கஸ்டமர்களாக இருந்தால், அவர்களுக்கும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (64kbps Speed Post Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 4ஜி கஸ்டமர்களாக (4G Customers) இருந்தாலும், 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் போதுமான டேட்டாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.
டேட்டா சலுகைகளுக்கு அடுத்து முக்கியமான சலுகைகளாக இருக்கும் வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் வழக்கம்போலவே கிடைக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
இப்போது, ஓடிடி (OTT), கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) மற்றும் ஏஐ சந்தா (AI Subscription) போன்ற மற்ற சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படும். இதை 84 நாட்கள் என்று நினைக்க வேண்டும். வழக்கமான 3 மாதங்களுக்கு கிடைக்கும்.
கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பொறுத்தவரையில் முதலாவதாக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஜியோ கிளவுட் ஆப்பை டவுன்லோட் செய்து, ரீசார்ஜ் செய்யப்பட்ட மொபைல் நம்பரை லாகின் செய்தால் போதும், இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த சலுகை போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) திட்டத்தின் கீழ் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பானா, ப்ளோவ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களும் கிடைக்கும். இந்த சந்தாவை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி 18 மாதங்களுக்கு தனியாக பெறும்பட்சத்தில் ரூ.35,100 தேவைப்படும். ஆனால், இதில் இலவசமாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications