Jio SIM கார்டு இருக்கா.. அடுத்த 3 மாசத்துக்கு ரீசார்ஜ்.. இதை முதல்ல கவனிங்க.. வாய்ஸ் கால்கள்.. 168ஜிபி டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டை பயன்படுத்தும் கஸ்டமர்கள் 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.859 திட்ட விவரங்கள் (Jio Rs 859 Plan Details): அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். 5ஜி ஸ்மார்ட்போன் கஸ்டமர்களிடம் இருக்க வேண்டும்.

இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், 4ஜி கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்கள் முழுவதும் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) இந்க ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. ஆகவே, 5ஜி அல்லது 4ஜி டேட்டா என்று இரண்டிலும் பட்டையை கிளப்புகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும். மேலும், ஜியோ டிவி (JioTV) சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.
ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer): டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் வழியாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். அன்லிமிடெட் டேட்டா கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு கவலை இருக்காது.
இந்த ஓடிடி சந்தா போக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவை கொடுத்து இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ மொபைல் நம்பர் மட்டுமே வைத்து பெற்று கொள்ள முடியும். ஜியோ கிளவுட் ஆப்பில் மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்தால், போதும் சலுகையை பெற்று கொள்ளலாம். ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை கொடுத்துள்ளது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஜெமினி ப்ரோ சந்தாவானது, 18 மாதங்களுக்கு கிடைக்கிறது. ப்ரோ சந்தாவில் கிடைக்கும் பிரீமியம் அணுகல்கள் இதில் வருகின்றன. ஆகவே, 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. நானோ பனானா மற்றும் ப்ளோவ் கிரெடிட்கள் கிடைக்கிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100ஆக இருப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜெமினி ப்ரோவுக்கு 18 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் ரூ.349 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட 5ஜி திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, 18 மாதங்கள முழுவதும் இந்த ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும். இதைவிட மலிவான விலைக்கு சென்றால், தொடர்ந்து கிடைக்காது.


Click it and Unblock the Notifications