ஜியோவின் ரூ.859 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. எவ்வளவு நாள் வேலிடிட்டி? எது சிறந்தது?
ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். சமீபத்தில் கூட ஜியோ புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக ஜியோ கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ ரூ.859 மற்றும் ரூ.899 விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் எவ்வளவு நாள் வேலிடிட்டி வழங்குகின்றன மற்றும் என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன என்பதையும் மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதையும் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்ககுிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேசமயம் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் உள்ளது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.

தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud போன்றவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் கூட தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எது சிறந்தது? ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வதை விட ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதாவது அதிக வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது ஜியோ ரூ.899 திட்டம். சுருக்கமாகக் கூறினால் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் அதிக வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா சலுகையைப் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








