அடிச்சு புடிச்சு ரீசார்ஜ்.. மாதம் ரூ.285 போதும்.. 84 நாட்களுக்கு டேட்டா.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் கால்கள்!
ஜியோ வாடிக்கையாளர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யும் விதமாக மாதம் வெறும் ரூ.285 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரம் இதோ.
ஜியோ ரூ 857 திட்ட விவரங்கள் (Jio Rs 857 Plan Details): இதுவொரு புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி ஆப் சந்தாவும் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டாவை தினசரி பயன்படுத்தலாம்.

மொத்தமாக 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது, 2 ஜிபிக்கு பிறகும் குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.
தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது.
அதேபோல வழக்கமாக கொடுக்கப்படும் ஜியோசினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதம் ரூ.285 செலவில் இவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகிறது. கூடுதல் ஓடிடி சந்தாவுக்கு பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், டேட்டா வவுச்சர்களும் கிடைக்கின்றன. முந்தைய திட்டத்தை போலவே தினசரி 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதோடு 6 ஜிபிக்கான 3 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 14 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) சந்தா கிடைக்கிறது.
இதுபோக எபிக் ஆன் (EPIC ON), சவ்பால் (Chaupal), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), டாகுபே (Docubay), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆகிய ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதுவே அமேசான் பிரைம் வீடியோ சந்தாவையும், ஜியோசினிமா பிரீமியம் சந்தாவையும் 84 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதிகப்படியான ஓடிடி ஆப்களின் சந்தா வேண்டுமானால், இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








