பழசுலாம் எதுக்கு.. புதுசுக்கு வாங்க.. புதிய திட்டங்கள் அறிவிப்பு.. ஆரம்பித்த அம்பானி.. ஓடிடி, டேட்டா, வாய்ஸ்!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக புதிய ப்ரீபெய்ட் திட்டம் (New Prepaid Plan) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டேட்டா முதல் ஓடிடி ஆப் வரையில் அனைத்து சலுகைகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள் இதோ.
என்னதான், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சலுகைகளை கொட்டி கொடுத்தாலும், ஜியோவின் சலுகைகளுக்கு மத்தியில் அவை காணாமல் போய்விடுகின்றன. இதனாலேயே நாளுக்கு நாள் ஜியோ கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது, புதிய திட்டங்கள் மூலம் மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

ஜியோ ரூ 857 திட்ட விவரங்கள் (Jio Rs 857 Plan Details): இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data), எஸ்எஎம்எஸ் (SMS), ஓடிடி (OTT) சந்தா மட்டுமல்லாமல், ஜியோ ஆப்களின் (Jio Apps) சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
ஆகவே, 168 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இதுமட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த புதிய திட்டத்துக்கும் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் (Jio 5G Welcome Offer) பொருந்தும்.
ஆகவே, ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதற்காக கூடுதல் கட்டணம் கிடையாது. ஆகவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்காது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
வாய்ஸ் கால் சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த சந்தாவது, மொபைல் எடிஷன் (Mobile Edition) சலுகைகளை வழங்குகிறது. ஆகவே, டிவியில் பயன்படுத்த முடியாது. அதேபோல ஜியோசினிமா (JioCinema) சந்தாவும் கிடைக்கிறது. இதில் ஐபிஎல் 2024 போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இது பிரீமியம் சந்தா கிடையாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த ஓடிடி சந்தாவுக்கு அடுத்தப்படியாக ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அதிகப்படியான டேட்டா, ஓடிடி சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை பெறலாம்.
இதேபோல ஜியோபாரத் போன்களுக்கும் புதிய திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதில், ஏராளமான சலுகைகள் இருக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 500 எம்பி வீதம் டேட்டா சலுகை கிடைக்கிறது. 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும்
28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்கள் 2 முறை வழங்கப்படுகிறது. முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளாம். இந்த ஜியோபாரத் திட்டத்தில் ஜியோசாவன் (JioSaavn) மற்றும் ஜியோ சினிமா ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications