கேபிள் TV-க்கு ஒரே போடு.. இனி 1000+ டிவி சேனல்கள்.. 14 ஓடிடி சந்தா.. 1 ஜிபிபிஎஸ் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio) நிறுவனத்திலேயே அதிக விலை கொண்ட ஃபைபர் திட்டத்தில் (Fiber Plan) 1 ஜிபிபிஎஸ் வேக டேட்டா மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்கள், பிரீமியம் ஓடிடி ஆப்கள் உள்ளிட்ட நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த அதிக விலை கொண்ட ஜியோஹோம் திட்டத்தின் (JioHome Plan) சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோஹோம் திட்டங்களில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுடன் ரூ.599 விலை முதல் திட்டங்கள் கிடைக்கிறது. இதில் ஜியோ ரூ.8,499 திட்டமானது அதிக விலை கொண்டதாக இருக்கிறது. இந்த விலைக்கு மேல் திட்டங்கள் கிடையாது. ஆகவே, சலுகைகளும் இதில் அதிகப்படியாக கிடைக்கும். இந்த ரூ.8,499 விலை மாதத்துக்கு செலவிப்பட வேண்டிய தொகையாக உள்ளது.

இதுபோக ஜிஎஸ்டி கட்டணம், இன்ஸ்டாலேஷன் கட்டணம் உள்ளிட்டவை இருக்கலாம். இவ்வளவு தொகையை கொடுத்து பெற்றுவிட்டால், ஒரு வீடு அல்ல பல வீடுகளுக்கு ஃபைபர் டேட்டாவை கொடுக்க முடியும். கமர்சியலாகவும் இந்த ஜியோஹோம் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் கிடைக்கும் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.8,499 திட்ட விவரங்கள் (Jio Rs 8499 Plan Details): இந்த திட்டத்தை புதிதாக பெற வேண்டுமானால், குறைந்தது 3 மாதங்களுக்கான தொகையை அட்வான்ஸ் முறையில் செலுத்த வேண்டும். இப்படி 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரையில் பெற்று கொள்ளலாம். முதல்முறை பெற்ற பிறகு மாதத்துக்கான தொகையை மட்டுமே செலுத்தி சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
மற்ற ஜியோஹோம் திட்டங்களில் கிடைக்காதபடி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இதில் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மல்டிபிள் டிவைஸ்களில் பயன்படுத்தினாலும், டேட்டா வேகம் அதிகமாக இருக்கும். மாதத்துக்கு அதிகபட்சமாக 6600 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
வை-பை கால்களை (Wi-Fi Calls) செய்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி கால்கள் (STD Calls) கிடைக்கும். 1000+ லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) கிடைக்கும். இதை 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். இதே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக 14+ ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
இதில் ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. நெட்பிளிக்ஸ் பிரீமியம் (Netflix Premium), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), யூடியூப் பிரீமியம் (YouTube Premium), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) உள்ளிட்ட பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். இதுபோக கூடுதல் ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது.
ஆகவே, ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play),ஷீமாரூமி (ShemarooMe), ஈடிவி வின் (ETVWin) மற்றும் ஜியோடிவி பிளஸ் வழியாக ஃபேன்கேட் (FanCode) ஓடிடி ஆப்களின் சந்தாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் அமேசான் பிரைம் லைட் சந்தா 2 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே இதை பெற்று கொள்ள முடியும். ஜியோ போர்டல், மைஜியோ ஆப் மற்றும் வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்யலாம். அதேபோல அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் வழியாகவும் இந்த திட்டங்களை பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications