2026 க்கு இனி இதுதான்.. ஒரே ரீசார்ஜில் 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2025 ஆம் ஆண்டு கிடைத்த வேல்யூ திட்டமானது, 2026 ஆம் ஆண்டிலும் கிடைக்கிறது. மலிவான விலைக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ வெப்சைட் அல்லது மை ஜியோ ஆப் வழியாக ஜியோ ரூ.799 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த திட்டம் வேல்யூ திட்டங்களின் கீழ் மட்டுமே கிடைக்கும். 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களின் பட்டியலில் கிடைக்காது. ஆகவே, ஜியோ வெப்சைட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் வேல்யூ விருப்பத்துக்கு செல்லுங்கள்.

பிறகு மலிவு விலை பேக்குகள் (Affordable Packs) விருப்பத்துக்கு செல்லுங்கள். இதில் முதலாவது திட்டமாகவே இந்த ஜியோ ரூ.799 திட்டம் இருக்கும். இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ப்ரீபெய்ட் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த திட்டம், 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் கிடைத்து வந்தது. பிறகு திடீரென்று அதில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால், முற்றிலும் நீக்கப்பட்டதாக கஸ்டமர்களிடையே அதிருப்தி கிளம்பியது. பிறகு சத்தமே இல்லாமல், வேல்யூ திட்டங்களின் கீழ் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுவிட்டது. இதை அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருவதால், ஜியோ நிறுவனமும் நீக்காமல் தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தில் அப்படியென்ன சலுகைகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜியோ ரூ. 799 வேல்யூ திட்டம் (Jio Rs 799 Value Plan): 84 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவையும், அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.
ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் வேல்யூ பிரிவின் கீழ் கிடைப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படாது. தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைப்பதை போலவே 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு வேல்யூ திட்டம் இருக்கிறது. இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். சொல்லப்போனால், வாய்ஸ் கால்களுடன் மலிவான விலைக்கு தொடங்கும் திட்டமாகவும் இது இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ ரூ. 189 வேல்யூ திட்டம் (Jio Rs 189 Value Plan): 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் கொடுத்து உள்ளது. இதில் தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. 28 நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஜியோ கிளவுட் சலுகை கிடைக்கிறது. ஜியோ டிவி சலுகையும் இந்த வேல்யூ திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டங்கள் மலிவாக கிடைப்பதால், அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








