Home
News

Jio செம்ம போடு.. 84 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

கொடுக்குற காசுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கனும் என்று தேடித்தேடி ரீசார்ஜ் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு பொருத்தமான ஒரு வேல்யூ திட்டம் (Value Plan) இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுத்து இருக்கிறது. இது ஜியோ வேல்யூ திட்டங்களின் கீழ் கிடைக்கிறது.

ஜியோவில் மலிவான விலைக்கு திட்டங்கள் வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு வேல்யூ பிரிவுக்கு செல்லலாம். இதில் ரூ.189 முதல் ரீசார்ஜ் கிடைக்கும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டங்கள், வாய்ஸ் கால்கள், எம்எஸ்எஸ்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டா கொண்ட திட்டங்கள் இதில் இருக்கின்றன.

Jio செம்ம போடு.. 84 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஆனால், இந்த வேல்யூ பிரிவில் 2 திட்டங்களில் மட்டும் தினசரி டேட்டா கிடைக்கிறது. அதில் ஒரு திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், ரூ.349 விலைக்கு மேல் கிடைக்கும் ஜியோ ஸ்பெஷல் ஆஃபர்கள் இதில் கிடைக்காது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது.

ஜியோ ரூ.799 வேல்யூ திட்டம் (Jio Rs 799 Value Plan): இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகும 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கிடைக்கும். ஆனால், 5ஜி டேட்டாவை (5G Data) இந்த திட்டம் கொடுக்காது.

ஆகவே, 4ஜி வேகத்தில் மட்டும் 126 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேல்யூ திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. 84 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். ஜியோ ஆப்கள் (Jio Apps) கிடைக்கின்றன.

இதில் ஜியோ டிவி (Jio TV) கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கும். ஆனால், இதில் கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படாது. இந்த சலுகைகள் போக கூடுதலாக ஜெமினி ப்ரோ (Gemini Pro) திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரோ திட்டத்தை 18 மாதங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.35100 மதிப்புள்ள இந்த ப்ரோ திட்டம் இலவசமாக கிடைக்கும்.

5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட பிரீமியம் அனுகல்கள் கொடுக்கப்படும். இந்த கூகுள் ஜெமினி ப்ரோ சந்தைவை 18 மாதங்கள் முழுவதும் பயன்படுத்த வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு குறைந்தது ரூ.299 விலை கொண்ட திட்டத்தை பெற வேண்டும்.

இதற்கும் குறைவாக விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தொடர்ந்து கிடைக்காது. இதைவிட மலிவான விலைக்கு 1.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், ரூ.199 திட்டத்தை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெறலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆகிய ஆப்களை அணுகலாம். மலிவான தினசரி டேட்டாவுக்கு ஏற்றதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Rs 799 Value Plan 84 Days Validity 1.5 GB Per Day Data Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X