Home
News

Jio SIM இருக்கா.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்.. ஓடிடி சந்தா!

மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடிக்கொண்டிருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு தவிர்க்க முடியாத வேல்யூ திட்டமாக ஜியோ ரூ.799 திட்டம் இருக்கிறது. டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் போக ஓடிடி மற்றும் ஏஐ சந்தாவையும் கொடுத்து, கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ.799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஓடிடி சந்தா மற்றும் ஏஐ சந்தா கொண்ட திட்டமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கின்றன.

Jio SIM இருக்கா.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்!

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மொத்தமாக வேலிடிட்டி முழுவதும் 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுக்கிறது.

இது மலிவு விலையில் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படவில்லை. ஜியோ டிவி (Jio TV) சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவையும் இந்த ஜியோ ரூ.799 திட்டம் கொடுக்கிறது. ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் பிரீமியம் ஓடிடி சந்தாவை கொடுத்து இருக்கிறது.

ஆகவே, ஜியோஹாஸ்டார் மொபைல் சந்தாவை (JioHotstar Mobile Subscription) இந்த ஜியோ ரூ.799 திட்டம் கொடுக்கும். இந்த மொபைல் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவையும் கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த ஜெமினி சந்தாவை 18 மாதங்கள் பயன்படுத்தலாம்.

இதை தனியாக கஸ்டமர்கள் பெறும்பட்சததில் ரூ.35,100 விலைக்கு கொடுக்கப்படும். ஆனால், இதில் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஜெமினி ப்ரோ சந்தாவில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நானோ பனானா (Nano Banana), வியோ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட அணுகல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த திட்டத்தை 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் பக்கத்தில் தேடினால் கிடைக்காது. வேல்யூ பிரிவின் கீழ் மட்டுமே கிடைக்கும். சொல்லப்போனால், 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இது இருக்கிறது. இதே சலுகைகளை ஒரு மாதத்துக்கு மட்டும் பெற விரும்பினால், ரூ.339 விலைக்கு கிடைக்கும் திட்டமானது சரியாக இருக்கும்.

ஜியோ ரூ.399 திட்டத்தில் காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜெமினி ப்ரோ சந்தாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 799 Plan With Unlimited Voice Calls 126GB Data JioHotstar Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X