Home
News

Jio SIM கார்டு காட்டில் மழை.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களாக இருப்பவர்களுக்கு மலிவான விலைக்கு கிடைக்கும் 84 நாட்கள் திட்டமாக ரூ.799 திட்டம் இருக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ்கள் (SMS), கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சலுகைகள் கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

Jio SIM கார்டு காட்டில் மழை.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 126 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதை 4ஜி வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனென்றால், இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை பொருந்தாது. ஜியோ கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வருகிறது.

மேலும், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதை தனியாக பெறும்பட்சத்தில் ரூ.3,5100 செலவு செய்ய வேண்டும். ஆனால், இந்த ஜியோ திட்டத்தில் முற்றிலும் இலவமாக கிடைக்கிறது.

5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கொண்ட சந்தாவாக இது இருக்கிறது. ஜிமெயில், டிரைவ் உள்ளிட்டவற்றில் இந்த கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இமேஜ் ஜெனரேஷன் செய்ய பயன்படுத்தப்படும் நானோ பனானா (Nano Banana), வியூ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட பிரீமியம் சலுகைகளும் இந்த ஜியோ திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

இதுவொரு வேல்யூ திட்டமாக இருக்கிறது. அதாவது, மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களின் பட்டியலில் இருக்கிறது. மேலும், 1.5 ஜிபி டேட்டாவை நாள்தோறும் கொடுக்கும் மலிவு விலை திட்டமாகவும் இது இருக்கிறது. ஆகவே, இதை வேல்யூ (Value) பிரிவுக்கு சென்று மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். எப்படி ரீசார்ஜ் செய்யவது என்பதை பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். முகப்பு பகத்தில் இருக்கும் மொபைல் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதன் கீழே டிஸ்கவர், ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், ட்ரூ 5ஜி உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் தோன்றும். இதில் ப்ரீபெய்ட் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.

இப்போது, பாப்புலர் திட்டங்கள், ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள், யூத் & கேமிங் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் இருக்கும். இதில் கடைசியாக இருக்கும் வேல்யூ (Value) விருப்பத்தை கிளிப் செய்து கொள்ளுங்கள். இப்போது, வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans), மலிவு விலை பேக்குகள் (Affordable Packs) விருப்பங்கள் இருக்கும்.

இதில் மலிவு விலை பேக்குகள் விருப்பத்தை கிளிக் செய்தால், முதலாவது திட்டமாக ஜியோ ரூ.799 திட்டம் இருக்கும். இதை கிளிக் செய்தால், அதில் கிடைக்கும் சலுகைகள் காண்பிக்கப்படும். பிறகு பை (Buy) விருப்பத்தை கிளிக் செய்தால் போதும், பேமெண்ட் விருப்பம் தோன்றும். யுபிஐ, டெபிட் கார்டு, டிஜிட்டல் பேங்கிங் உள்ளிட்டவை வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 799 Plan With 84 Days Validity Unlimited Voice Calling 1.5 GB Data This Is Best Choice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X