Jio-னா மாஸ்.. மலிவு விலை 84 நாள் பிளான்.. தினசரி 1.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. FREE நண்மை.. எந்த பிளான்.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களே குறைந்த செலவில் அதிக நாள் வேலிடிட்டியை வழங்கும் சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plan) தேடி வருகிறீர்களா? அப்படியானால், ஜியோ வழங்கும் இந்த 84 நாள் வேலிடிட்டி திட்டத்தை (Jio 84 days validity prepaid plan) ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். அதிக செலவின்றி ஏறக்குறைய 3 மாதங்களுக்கு நெருக்கிய வேலிடிட்டியை (3 months validity) வழங்கும் இந்த திட்டத்தின் விலை மற்றும் இத்துடன் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் இந்தியாவின் சிறந்த முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. என்ன தான் இந்தியாவில் ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், மக்கள் ஜியோ நெட்வொர்க்கையே அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

Jio-னா மாஸ்.. மலிவு விலை 84 நாள் பிளான்.. தினசரி 1.5GB டேட்டா:
இதற்கான முக்கியமான காரணம் விலை மலிவான திட்டங்கள் மற்றும் இந்தியா முழுக்க சிறந்த நெட்வொர்க் கவரேஜ் சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. மற்ற டெலிகாம் திட்டங்களை காட்டிலும் ஜியோவின் திட்டங்கள் விலை மலிவானதாக இருக்கிறது. ஆனால், கடந்த ஜூலை 2024 இல் டெலிகாம் நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது.
ஜியோ திட்டங்களின் விலை 18% மேல் அதிகரித்தது. இதனால், பல கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நெட்வொர்க் சேவைக்கு கூட்டம் கூட்டமாக மாறத்துவங்கினர். இந்த போக்கு ஜியோவுக்கு பெரியளவு இழப்பை உருவாக்கியது. இதன் காரணமாக, ஜியோ நிறூவனம் தற்போது மீண்டும் மலிவு விலையில் அதிக நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது.
ஜியோ ரூ. 799 திட்டம் (Jio Rs 799 Plan):
ஜியோ நிறுவனம் தற்போது 10 புதிய திட்டங்களை 84 நாட்கள் செல்லுபடியுடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் குறைந்த விலை விருப்பமாக, ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (new Jio prepaid plans) தான் ஜியோ ரூ. 799 திட்டம் (Jio Rs 799 Plan). இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
இந்த ஜியோ 799 பிளான் (Jio 799 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை அணைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்குகிறது. இதில் லோக்கல், STD மற்றும் இலவச ரோமிங் வசதி சேவைகளை ஜியோ உள்ளடிக்கியுள்ளது. இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மையோடு வருகிறது. இந்த ஜியோ 799 திட்டம் மொத்தமாக 126GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது.
இது தவிர, ஜியோ வழங்கும் கூடுதல் நன்மையாக, இந்த திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சேவை போன்ற இலவச நன்மைகளையும் வழங்குகிறது. உங்களுக்கு தினசரி 1.5GB டேட்டா போதும், ஆனால், 3 மாதங்களுக்கு எந்த தடையுமின்றி குறைந்த செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை வேண்டும் என்றால், இந்த திட்டம் உங்களுக்கான சிறந்த திட்டமாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








