Home
News

விட்டுக்கொடுக்காத ஜியோ.. ரூ.799-க்கு மட்டுமில்ல.. ரூ.666-க்கும் அதேதான்.. 1.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது, நீக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ரூ.799 திட்டத்தை வேல்யூ திட்டங்களின் (Value Plans) கீழ் தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதே சலுகைகளை ரூ.666 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்திலும் (Prepaid Plan) கொடுக்கிறது. ஆனால், ஒரேவொரு சலுகையில் மாற்றம் இருக்கிறது. இந்த திட்டங்களின் முழு சலுகைகளை பார்த்தால் மட்டுமே அது தெரியவரும். இதுகுறித்த விவரங்கள் இதோ.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களின் சலுகைகளும் மாற்றப்பட்டன. ஆகவே, ஜியோவில் கட்டணங்கள் உயர்வதற்கு முன்பு ரூ.666 திட்டத்தில் கிடைத்த சலுகைகள் ரூ.799 திட்டத்துக்கு மாற்றப்பட்டன. இதனால், ரூ.666 மதிப்பிலான திட்டத்தில் வேலிடிட்டி மட்டும் குறைக்கப்பட்டது.

விட்டுக்கொடுக்காத ஜியோ.. ரூ.799-க்கு மட்டுமில்ல.. ரூ.666-க்கும் அதே!

மற்றபடி சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைத்தன. இதனால், ரூ.799 திட்டம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் ரூ.799 திட்டம் அதனுடயை 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், அந்த திட்டம் நீக்கப்பட்டதாக கஸ்டமர்களிடையே அதிருப்தி நிலவியது. இதை ஜியோ நிறுவனம் உடனடியாக சரி செய்தது.

அதாவது, சத்தமே இல்லாமல் அந்த திட்டமானது, வேல்யூ திட்டங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது. ஆனால், எந்த மாற்றமும் அதில் செய்யப்படவில்லை. எப்படியோ திட்டம் கிடைக்கிறதே என்று கஸ்டமர்கள் பெருமூச்சு விட்டனர். இவர்களுக்கு இப்போது ரூ.666 திட்டமும் ஆப்ஷனில் சேர்ந்துவிட்டது. இரண்டும் ஒரே சலுகைகளை கொடுக்கின்றன.

ஜியோ ரூ 799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 799 Prepaid Plan): இந்த வேல்யூ திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சொல்லப்போனால், வேல்யூ திட்டங்களில் தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் அடிமட்ட விலைக்கு அதிக வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் மட்டும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

ஆகவே, 84 நாட்களுக்கு 126 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கஸ்டமர்கள் எதிர்பார்க்க முடியாது. மற்ற திட்டங்களை போலவே இதிலும் அது கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுத்துள்ளது.

மேலும், இந்த வேல்யூ திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதோபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழக்கம்போலவே தினசரிக்கு செய்ய கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (Jio TV) ஆப் பயன்படுத்த கிடைக்கிறது. இதுபோக இந்த வேல்யூ திட்டத்தில் மட்டுமே ஜியோ அன்லிமிடெட் சலுகையும் கிடைக்கிறது.

அதாவது, ரூ.299 திட்டத்துக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஜியோ அன்லிமிடெட் சலுகையின் கீழ் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா மற்றும் ஜியோ கிளவுட் ஆப் மூலம் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், இது வேல்யூ திட்டங்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நேரத்திலேயே ஜியோ ரூ.799 திட்டம் வேல்யூ திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டது. ஆகவே, இந்த திட்டத்துக்கு மட்டும் ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதிலும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 50 ஜிபிக்கான ஏஐ கிளவுட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இப்போது ரூ.666 திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 666 Prepaid Plan): இதில் மேற்கண்ட அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆனால், வேலிடிட்டி மட்டும் 84 நாட்களுக்கு பதிலாக 70 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ், 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார், ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை கொடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 799 Plan Vs Rs 666 Plan Unlimited Voice Calls 1.5 GB Daily Data 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X