போட்டாரு பாரு அம்பானி.. அடுத்த 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா.. மலிவு விலை Jio ரீசார்ஜ்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவு விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு வேல்யூ திட்டம் (Value Plan) கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மூன்று மாதங்களுக்கு மலிவான விலைக்கு ரீசார்ஜ் திட்டம் வேண்டுமானால், ரூ. 799 விலை கொண்ட ஜியோ திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டம் வேல்யூ பிரிவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மலிவு விலை திட்டமாக இருப்பதால், 1.5 ஜிபி டேட்டா பிரிவில் இருந்து, வேல்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, தேடிப்பிடித்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஜியோ ரூ. 799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுள்ளது. இந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கும். ஜியோ ஸ்பெஷல் ஆபரின் கீழ் கிடைக்கும் சலுகைகள் இந்த திட்டத்துக்கு பொருந்தாது. மேலும், 5ஜி டேட்டாவும் கிடைக்காது.
ஆகவே, 4ஜி வேகத்தில் மட்டுமே டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேகத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டிக்கு கணக்கிட்டால் மொத்தமாக 126 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கும். மேலும், 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local STD Roaming Calls) இந்த திட்டம் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் வழக்கம்போல கிடைக்கின்றன. இதை தினசரிக்கு கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
இதைவிட மலிவான விலைக்கு வேல்யூ திட்டம் கேட்டால், மற்றொரு திட்டம் இருக்கிறது. சொல்லப்போனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஆரம்ப விலை திட்டமாகவும் இது இருக்கிறது. வாய்ஸ் கால்களுடன் மினிமம் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த திட்டத்தை தவிர வேறு ஆப்ஷன்கள் ஜியோவில் கிடையாது. இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ ரூ. 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த வேல்யூ திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, மலிவான விலைக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) பெற்று கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
முந்தைய வேல்யூ திட்டத்தில் கிடைத்ததை போல இதில் தினசரிக்கு டேட்டா கொடுக்கப்படாது. ஏனென்றால், இது ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவை 28 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த சலுகைகளுக்கு அடுத்து 300 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
இந்த எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடையாது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கும் சேர்த்தே கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேல்யூ திட்டங்களாக இது இருக்கின்றன. மீண்டும் டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தால், விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








