Home
News

Jio சிம் கார்டு இருக்கா.. ரீசார்ஜில் இடி மேல் இடி.. போச்சா 1.5 ஜிபி திட்டம்.? இனிமே ரூ.899-க்கு தான் போகனுமா?

ஜியோ (Jio) நிறுவனத்தின் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நாளுக்கு நாள் இடி இறங்குவது போல ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் கிடைத்த ரூ.249 திட்டம் நீக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக ஒரு திட்டம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கஸ்டமர்களுக்கு கிடைக்காது என்று இல்லை.

ஜியோ, ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் இதுபோன்ற தகவல்களை மறுக்கவும் இல்லை. அதேபோல உண்மைதான் என்று ஒத்துக் கொள்ளவும்வில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் மலிவு விலை திட்டங்கள் நீக்கம் செய்யப்படுகின்றன.

Jio சிம் கார்டு இருக்கா.. ரீசார்ஜில் இடி மேல் இடி.. போச்சா 1.5 ஜிபி?

ஜியோ நிறுவனமானது, அதன் ரூ.249 விலை கொண்ட திட்டத்தை நீக்கியது. இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய சலுகைகள் கிடைத்தன. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்ததால், மலிவு விலையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இது திடீரென நீக்கம் செய்யப்பட்டது.

இதனால், ஏர்டெல் நிறுவனம் மட்டுமே அந்த விலைக்கு திட்டத்தை வைத்திருக்க போகிறது என்று நினைத்தால், அடுத்த நாளே ஏர்டெல் நிறுவனமும் அதனுடை ரூ.249 விலை கொண்ட திட்டத்தை நீக்கிவிட்டது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே டெலிகாம் மார்கெட்டில் இதுதான் பேச்சாக இருக்கிறது. ஒரு திட்டம்தானே என்று கஸ்டமர்கள் பெருமூச்சு விடும் நேரத்தில் அடுத்தது நீக்கப்பட்டுவிட்டது.

ஜியோ ரூ 799 திட்டம் ஆனது திடீரென நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டமானது நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுத்தது. இதனால் கஸ்டமர்கள் கடுப்பான நேரத்தில், அந்த திட்டம் கிடைத்த 1.5 ஜிபி செக்மெண்ட்டில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மலிவான பேக் (Affordable Packs) திட்டங்களின் கீழ் சத்தமே இல்லாமல், சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது, 1.5 ஜிபி செக்மெண்ட்டின் கிடைக்கும் 84 நாட்கள் திட்டத்தை பார்ப்போம்.

ஜியோ ரூ 889 திட்ட விவரங்கள் (Jio Rs 889 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இனிமேல் இதுவே ஆரம்ப விலையில் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டமாக இருக்கப்போவதால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.

ஆகவே, தினசரிக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மட்டுமே இதில் கொடுக்கப்படுகிறது. மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழக்கம் போல கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இதுபோக கூடுதல் சலுகையாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ஆரம்ப விலை 84 நாட்கள் திட்டமாக இருந்தாலும், ஒரு கூடுதல் சலுகையை கொடுத்து சமாளித்திருக்கிறது. இதுபோக ஜியோ அன்லிமிடெட் சலுகைகள் (Jio Unlimited Offers) இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இதில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.

இதில் மொபைல் சலுகைகளை 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையின் கீழ் 50 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதுபோக ஜியோ டிவி (JioTV) சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், இந்த திட்டத்தின் விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், ஜியோஹாட்ஸ்டார், கிளவுட் டேட்டாவுடன் பார்த்தால் லாபமாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Removed Rs 799 Plan With 84 Days Validity Now Same Benefits Cost Rs 889 But JioSaavn Pro Added
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X