FIFA World Cup 2026: ஜியோ போட்ட ஒரே போடு.. கண்ணை மூடிக்கிட்டு இதை ரீசார்ஜ் செய்யலாம்.. 3 மாதம் ஜோர்!
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026) போட்டிகள் ஜீ5 தளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. இதனை காண பிரத்யேக ப்ரீபெய்ட் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இதில் தினசரி டேட்டா, 40 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜீ5 ஓடிடியை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ.798 திட்ட விவரங்கள் (Jio Rs 798 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளை மட்டுமே கொடுக்கும். ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் தினசரிக்கு டேட்டா சேவை கொடுக்கப்படும். ஏற்கனவே, இருக்கும் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்துடன் இதை சேர்த்து கொள்ளலாம்.

தனியாக ரீசார்ஜ் செய்தால், சலுகைகளை அணுக முடியாது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 40 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, மொத்தமாக 40 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
இதுபோக ஜீ5 (Zee5) ஓடிடி சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தாலும், ஓடிடி சந்தா தொடர்ந்து கொடுக்கப்படும். இந்த ஜீ5 சந்தாவை கூப்பன் கோட் வழியாக பெற்று கொள்ள வேண்டும். இதற்கு மைஜியோ ஆப் (MyJio App) இருக்க வேண்டும்.
அதாவது, இந்த திட்டத்தை உங்களது ஜியோ நம்பருக்கு ரீசார்ஜ் செய்த உடனேயே கூப்பன் கோட் கொடுக்கப்பட்டுவிடும். இதை மைஜியோ ஆப்புக்கு சென்று கூப்பன் (Coupon) விருப்பத்தை கிளிக் செய்து, பிறகு மை வின்னிங் (My winning) விருப்பத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.
இதைவிட கூடுதல் ஓடிடி மற்றும் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், மற்றொரு பக்காவான திட்டம் இருக்கிறது. இதில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படும். கூடவே, பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும்.
இந்த சலுகைகள் போக ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆகவே, யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது.
மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆப்களும் வருகின்றன. இந்த ஓடிடி ஆப்களை ஜியோ டிவி ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், ஓடிடிகளுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications