விட்டாரு பாரு.. ரூ.75-க்கு கொடுக்கும் அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா.. அடிமட்ட Jio திட்டம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள் எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் சலுகை அதிகமாக கிடைக்கும்? இப்போதைக்கு எந்த திட்டம் மலிவாக கிடைக்கிறது? எதில் செலவு கம்மி போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்த பிறகே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இப்போது, அவர்களே மூக்கில் விரல் வைக்கும்படி மலிவான வேலிடிட்டி மற்றும் விலை கொண்ட திட்டங்கள் கமிறங்கி இருக்கின்றன. ரூ.75 முதல் திட்டங்கள் தொடங்குகிறது. இந்த திட்டங்களின் விவரம் இதோ.
இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் (Jio Prepaid Plans) 14 நாட்கள் வேலிடிட்டி முதல் 30 நாட்கள் வேலிடிட்டி வரையில் கிடைக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை பேக் செய்கின்றன. முதல் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்து தொடங்குவோம்.

ஜியோ ரூ 319 திட்ட விவரங்கள் (Jio Rs 319 Plan Details): இந்த திட்டத்தில் காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடையாது. இருப்பினும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
ஜியோ ரூ 355 திட்ட விவரங்கள் (Jio Rs 355 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் 25 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெறலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதற்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடையாது.
ஜியோ ரூ 239 திட்ட விவரங்கள் (Jio Rs 239 Plan Details): இந்த திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 33 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது. 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இருக்கிறது.
ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): இந்த திட்டத்துக்கும் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், தினசரிக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 22 ஜிபி டேட்டாவை பெறலாம். 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன.
ஜியோ ரூ 199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 1.5 ஜிபி டேட்டா வீதம் 27 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.
ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆனால், 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 28 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் கொடுக்கிறது.
ஜியோ ரூ 125 திட்ட விவரங்கள் (Jio Rs 125 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஜியோபோன் மற்றும் ஜியோபிரைமா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. 23 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் பெறலாம். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.
ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): இந்த திட்டமும் ஜியோபோன் மற்றும் ஜியோபோன் பிரைமா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 50 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. 100 எம்பி தினசரி டேட்டா + 200 எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications