இதுபோதுமே ஜியோ.. வெறும் ரூ 75 போதும்.. 23 நாட்கள் வேலிடிட்டி.. 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
மாத கடைசியில் பட்ஜெட் கையை கடிக்கும்போது, மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், உங்களுக்கு ஜியோ ரூ 75 திட்டம் (Jio Rs 75 Plan) மட்டுமே கச்சிதமாக இருக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா, ஜியோசினிமா போன்ற சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): ஜியோ நிறுவனம் மட்டுமல்லாமல், மற்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலும், இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio Prepaid Plan) மட்டுமே மலிவான விலையில் 4ஜி சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 100 எம்பி + 200 எம்பி ப்ரீ டேட்டா வீதம் மொத்தமாக 2.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகு ஃபேர் யூசேஜ் பாசிலியின் (Fair Usage Policy) கீழ் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடிகிறது. மொத்தமாக 50 எஸ்எம்எஸ் சலுகைள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதேபோன்ற சலுகைகளுடன் அதிகப்படியான டேட்டா வேண்டுமானால், நீங்கள் ரூ 186 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 186 திட்ட விவரங்கள் (Jio Rs 186 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், மற்ற சலுகைகளிலும் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்தினாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். அதோடு முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தலாம். இப்படி 2 திட்டங்களும் பணத்துக்கேற்ப நல்ல சலுகைகளையே வழங்குகின்றன. ஒருவேளை உங்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், மாதத்துக்கு வெறும் ரூ 74 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 24 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 50 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம். இப்படி 12 மாதங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதோடு ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் ஜியோபோன்களுக்காக (JioPhone) பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








