Home
News

அள்ளி கொடுக்கும் அம்பானி.. 200ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்? எவ்வளவு நாள் வேலிடிட்டி?

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ. அதுவும் மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் தான் கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது.

எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் கொண்டுவந்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மை மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அள்ளி கொடுக்கும் அம்பானி.. 200ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 749 prepaid plan): ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். மேலும் இந்த ஜியோ திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் உள்ளது. எனவே ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்ஸ்களை இந்த திட்டம் மூலம் பயன்படுத்த முடியும்.

அள்ளி கொடுக்கும் அம்பானி.. 200ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

குறிப்பாக ஏர்டெல் நிறுவனமும் இதுபோன்ற ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. ஆனால் அந்த ஏர்டெல் திட்டம் குறைந்த சலுகைகளைத் தான் வழங்குகிறது. அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.779 விலையில் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தான் கிடைக்கும். எனவே ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அள்ளி கொடுக்கும் அம்பானி.. 200ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

குறிப்பாக ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் அதிக டேட்டா மற்றும் அதிக நன்மைகளை வழங்குகிறது. எனவே அதிக வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ஜியோ நிறுவனத்தில் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. அதேபோல் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.808 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதாவது ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 808 prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கிறது. இதுதவிர 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலும் ஜியோ ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
jio Rs 749 recharge plan with 2GB daily data unlimited voice call benefits for 90 days validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X