ஜியோ ரூ.749 திட்டம்.. 72 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?
ஜியோ (jio) நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியா தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் கூடுதலாக 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
அதன்படி ஜியோ டிவி (JioTV), கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதிக டேட்டா, ஓடிடி மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 500 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.

அதுவும் யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம், (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








