Jio கிரிக்கெட் பேக்.. இது 20-20 இல்லை.. மொத்தமா முழுசா 200GB டேட்டா.. ஒரே பிளான் இத்தனை இலவச நன்மைகளா?
ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை இலவச டேட்டா நன்மையுடன் இன்னும் பல அட்டகாசமான நன்மைகளை இணைத்து வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்தின் கீழ் அதன் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக பல விதமான நன்மைகளுடன், பல புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் (Season) ஏற்ற விதத்தில், அதன் குறிப்பிட்ட சில திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதேபோல், சில பிரத்தியேகமான ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டங்களை (Jio Special Recharge Plans) அறிமுகம் செய்தும் அதன் பயனர்களை குஷி அடைய செய்து வருகிறது.

இது 20-20 இல்லை.. ஒரே 20 தான்.. ஆனா மொத்தமா Jio 200GB டேட்டா நன்மை:
இந்த வரிசையில், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் ரூ. 749 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio Rs 749 Prepaid Plan) திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Prepaid recharge plan) 200ஜிபி டேட்டா நன்மையை (200GB data benefits) அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த நன்மை கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ரீசார்ஜ் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது மக்களே.
ஆம், ஐபிஎல் ரசிகர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த ரூ. 749 ப்ரீபெய்ட் பிளான் என்ன நன்மைகளை அதன் திட்டத்தின் கீழ் வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாமா? ஜியோ ரூ. 749 பிளான் (Jio Rs 749 Plan) அதன் பயனர்களுக்கு 90 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Validity) வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் படி ஹை-ஸ்பீட் டேட்டாவை (high speed data) வழங்குகிறது.
இந்த திட்டம் இப்போது ஐபிஎல் ரசிகர்களுக்காக (IPL fans) இலவசமாக 20ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. முன்பு சொன்னது போல, இந்த திட்டம் உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை (2GB daily data benefit) 90 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மொத்த டேட்டா நன்மை 180ஜிபி ஆக கிடைக்கிறது. இத்துடன் IPL சீசனை முன்னிட்டு இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 749 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் இலவச நன்மைகள் (Jio Rs 749 Prepaid Plan Free Benefits):
இதன் மூலம், இந்த ஜியோ ரூ 749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வழங்கும் ஒட்டுமொத்த டேட்டாவின் அளவு 200ஜிபி ஆக கணக்கிடப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு 200GB டேட்டா (200GB data) என்பது சிறந்த நன்மையாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துடன் கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையும் (unlimited voice calls benefits) கிடைக்கிறது. ஜியோ வழக்கமாக வழங்கும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது.
இது தவிர இந்த ஜியோ ரூ 749 ப்ரீபெய்ட் திட்டம் கூடுதல் இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இதில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றின் இலவச சந்தாவும் உங்களுக்கு கிடைக்கிறது என்பதை நோட் செய்துகொள்ளுங்கள் மக்களே. இது தவிர மற்றொரு சூப்பர் இலவச நன்மையையும் ஜியோ இந்த திட்டத்துடன் உங்களுக்கு வழங்குகிறது.
அது தான் இலவச 5ஜி டேட்டா நன்மை.
ஆம், இந்த ஜிவ் ரூ 749 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (unlimited true 5G data) நன்மை பயன்படுத்த கிடைக்கிறது. உங்கள் பகுதியில் ஜியோ 5ஜி இணைப்பு கிடைக்கிறது என்றால், உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் கைவசம் இருக்கிறதென்றால் இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை நீங்கள் இலவசமாக அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








